For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எடியூரப்பா ராஜினாமா? நாங்கதான் மெஜாரிட்டின்னு 100% நம்பிக்கையா சொன்னாரே.. ஏன் இந்த திடீர் முடிவு?

நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்னதாக முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய எடியூரப்பா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    எம்எல்ஏ பதவி ராஜினாமா: எடியூரப்பா அதிரடி முடிவு- வீடியோ

    பெங்களூரு நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்னதாக முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய எடியூரப்பா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    எடியூரப்பா அரசு மீது இன்று மாலை 4 மணிக்கு கர்நாடக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு விதான் சவுதா பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    இதுவரை பாஜக, காங்கிரஸ், மஜத கட்சிகளை சேர்ந்த 193 எம்எல்ஏக்கள் பதவியேற்றுள்ளன. இன்னும் சற்றுநேரத்தில் கர்நாடக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவுள்ளதால் என்ன நடக்கும் என ஒட்டுமொத்த நாடும் எதிர்பார்த்து காத்திருக்கிறது.

    ராஜினாமா செய்ய முடிவு

    ராஜினாமா செய்ய முடிவு

    இந்நிலையில் 104 எம்எல்ஏக்கள் ஆதரவுடன் இதுவரை எடியூரப்பா தரப்புக்கு போதுமான எம்எல்ஏக்களின் ஆதரவு கிடைக்கவில்லை. இதனால் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்னதாகவே முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    முன்கூட்டியே ராஜினாமா?

    முன்கூட்டியே ராஜினாமா?

    இதற்காக பெங்களூரில் உள்ள டெல்லி பாஜக தலைவர்களுடன் எடியூரப்பா ஆலோசனை நடத்தி வருகிறார். வாக்கெடுப்பில் தோல்வியடையலாம் என்ற அச்சத்தில் முன்கூட்டியே அவர் ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளார் என கூறப்படுகிறது.

    100% மெஜாரிட்டி

    100% மெஜாரிட்டி

    வாக்கெடுப்பில் வெற்றி கிடைக்குமா என பாஜக தலைவர்கள் பலத்த சந்தேகத்தில் உள்ளனர். காலை வரை 100% எங்களுக்கு தான் மெஜாரிட்டி உள்ளது, நிச்சயம் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெறுவோம் என கூறினார் எடியூரப்பா.

    பிறகு கொண்டாடுவோம்

    பிறகு கொண்டாடுவோம்

    மேலும் 5 மணி வரை அமைதியாக இருங்கள் அதற்கு பிறகு கொண்டாடுவோம் என்றும் கூறினார். பாஜக மூத்த தலைவரான சதானந்தா கவுடாவும் எடியூரப்பாதான் அடுத்த 5 ஆண்டுகளுக்கு முதல்வர் என கூறினார்.

    பேரம் பேசும் ஆடியோ

    பேரம் பேசும் ஆடியோ

    இந்நிலையில் எடியூரப்பா ராஜினாமா முடிவை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காங்கிரஸ் எம்எல்ஏக்களுடன் பேரம் பேசிய ஆடியோக்களும் அவ்வப்போது வெளியாகி பாஜக தலைவர்களின் பிபியை எகிற வைத்துள்ளதால் அவர் இந்த முடிவை எடுத்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

    பீதியில் காங்கிரஸ், மஜத

    பீதியில் காங்கிரஸ், மஜத

    ராஜினாமா முடிவையடுத்து, 13 பக்க உரையை தயாரித்துள்ளார் எடியூரப்பா. அதில் மக்களுக்காக தான் செய்த நல்ல திட்டங்கள் பற்றி எடுத்துக்கூறி உருக்கமாக பேசியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேநேரத்தில் லிங்காயத் எம்எல்ஏக்கள் என்ன செய்யப் போகிறார்களோ என காங்கிரஸ் மஜத கட்சிகள் பீதியடைந்துள்ளன.

    English summary
    Yeddyurappa plans to resign his Chief Minister post sources says. Suddenly Yeddyurappa has taken this decission.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X