சிறையில் இரவு சாப்பிட்ட பிறகு மயங்கி விழுந்த சுதாகரனுக்கு ட்ரிப்ஸ்
பெங்களூர்: பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்ட ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் சுதாகரன் சனிக்கிழமை இரவு சாப்பிட்ட சிறிது நேரத்தில் மயங்கி விழுந்துள்ளார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் சுதாகரன் பெங்களூர் பரப்பன அக்ரஹாராவில் உள்ள வி.ஐ.பி. அறையில் சனிக்கிழமை இரவு அடைக்கப்பட்டார். இரவு சிறையில் அளிக்கப்பட்ட கேழ்வரகு களி, சாதம், சாம்பார் சாப்பிட்டார் சுதாகரன்.

சாப்பிட்ட சிறிது நேரத்தில் அவர் மயங்கி விழுந்தார். இதையடுத்து அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவரை சிறை வளாகத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்குமாறு தெரிவித்தனர்.
இதையடுத்து சிறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சுதாகரனுக்கு குளுக்கோஸ் ஏற்றப்பட்டது. அதன் பிறகு உடல் நலம் தேறிய அவர் இன்று காலை மருத்துவமனையில் இருந்து அவரது அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
சுதாகரனுக்கு 4 ஆண்டு தண்டனை தவிர ரூ.10 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications