இமாச்சல பிரதேச முதல்வராக சுக்விந்தர் சிங் சுகு தேர்வு.. நாளை பதவியேற்பு.. தீர்ந்தது குழப்பம்
சிம்லா: இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் வென்ற பிறகும் கூட யார் முதல்வர் என்பதில் குழப்பம் தொடர்ந்து வந்த நிலையில், 58 வயதான சுக்விந்தர் சிங் சுகு முதல்வராக தேர்வாகியுள்ளார்.
கடந்த நவ.12ஆம் தேதி இமாச்சல பிரதேசத்தில் சட்டசபை தேர்தல் நடந்தந நிலையில், நேற்று முன்தினம் அங்கு வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அங்கு பாஜக, காங்கிரஸ் உடன் ஆம் ஆத்மியும் இந்த முறை களமிறங்கியது.
அங்கு பல ஆண்டுகளாகவே காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சிகள் தான் மாறி மாறி ஆட்சியை பிடித்து வருகிறது. இந்தத் தேர்தலிலும் கூட அதுவே தொடர்ந்துள்ளது.

இமாச்சல் தேர்தல்
இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் வென்று தனிப்பெரும்பான்மை உடன் ஆட்சியை பிடித்துள்ளது. அங்கு மொத்தம் 70 தொகுதிகள் உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி 40 இடங்களை கைப்பற்றியுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு 43.9% சதவீகித வாக்குகள் கிடைத்துள்ளன. பாஜகவால் வெறும் 25 இடங்களில் மட்டுமே வெல்ல முடிந்துள்ளது. ஆட்சி மாற்றத்தை நிறுத்தி, ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என்று பாஜக பல்வேறு முயற்சிகளை எடுத்த போதிலும் அது தோல்வியிலேயே முடிந்துள்ளது.

ரொம்ப முக்கியம்
இந்த வெற்றி காங்கிரஸ் கட்சிக்கு ரொம்பவே முக்கியமானதாகும். ஏனென்றால் கடந்த 4 ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சி ஒரு தேர்தலில் வென்று ஆட்சியை பிடிப்பது இதுவே முதல்முறையாகும். கடந்த 2018இல் காங்கிரஸ் கட்சி ராஜஸ்தான், மத்தியப் பிரதேசத்தில் (இப்போது மபி-இல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுவிட்டது) வென்று ஆட்சியை பிடித்து இருந்தது. அதன் பிறகு 4 ஆண்டுகளாக நடந்த அத்தனை தேர்தல்கலிலும் காங்கிரஸ் வரிசையாக தோல்வியையே தழுவியிருந்தது. இந்தச் சூழலில் காங்கிரஸின் இந்த வெற்றி முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

தொடர்ந்த குழப்பம்
இருந்த போதிலும், இந்த வெற்றியை காங்கிரஸ் கட்சியால் முழுவதுமாக கொண்டாட முடியவில்லை. ஏனென்றால் அங்கு அடுத்த முதல்வர் யார் என்பதில் குழப்பம் தொடர்கிறது. நேற்றைய தினம் நடந்த எம்எல்ஏக்கள் ஆலோசனை கூட்டத்தில் டெல்லி தலைமை முதல்வர் யார் என்பதை முடிவு செய்வார் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இருந்த போதிலும், இன்று மாலை வரையிலும் யார் முதல்வர் என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. மறைந்த இமாச்சல் முதல்வரும் அம்மாநில காங்கிரஸ் மூத்த தலைவருமான வீரபத்ர சிங்கின் மனைவி பிரதீபா சிங் முதல்வராக நியமிக்கப்பட வாய்ப்புகள் அதிகம் என சொல்லப்பட்டது.

புதிய முதல்வர்
பிரதீபா சிங்கை முதல்வராக நியமிக்க வேண்டும் என்று பெரிய பேரணியை எல்லாம் காங்கிரஸ் கட்சியினர் நடத்தினர். இதற்கிடையே தற்போது எம்பியாக உள்ள அவர், முதல்வர் ரேஸில் இருந்து விலகிவிட்டார். அவருக்கு அடுத்து சுக்விந்தர் சிங் சுகு மற்றும் முகேஷ் அக்னிஹோத்ரி ஆகியோர் கடும் போட்டி நிலவிய நிலையில், இதில் சுக்விந்தர் சிங் சுகு இமாச்சல பிரதேச முதல்வராக அறிவிக்கப்பட்டார். அதிகாரப்பூர்வ அறிவிப்பு இரவு 7 மணியளவில் வெளியானது. 4 முறை எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனுபவசாலியான இவர் நாளை காலை புதிய முதல்வராக பதவியேற்க உள்ளார்.

யார் இந்த சுக்விந்தர் சிங் சுகு
அவர் நாளை பதவியேற்கலாம் என்றும் கூறப்படுகிறது. 58 வயதான சுக்விந்தர் சிங் சுகு கடந்த காலங்களில் மாநிலத்தில் பல முக்கிய பொறுப்புகளில் இருந்துள்ளார். அவர் இப்போது காங்கிரஸ் பிரச்சாரக் குழுவின் தலைவராகவும் உள்ளார்.. இப்போது அவர் ஐந்தாவது முறையாக இமாச்சலில் இருந்து எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்தத் தேர்தலில் அவர், பாஜகவின் விஜய் அக்னிஹோத்ரியை சுகு 3363 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்திருந்தார். இருப்பினும், இவரை முதல்வராக அறிவித்தால் பிரதீபா சிங் ஆதரவாளர்கள் போராட்டத்தில் குதிக்கவும் வாய்ப்புகள் அதிகம்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications