ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு தீர்ப்பு எதிரொலி.. சன் டிவி பங்கு மதிப்பு கிடுகிடு ஏற்பு
Subscribe to Oneindia Tamil
மும்பை: ஏர்செல்-மேக்சிஸ் வழக்கிலிருந்து மாறன் சகோதரர்களை டெல்லி கோர்ட் விடுவித்த நிலையில், சன் டிவி நெட்வொர்க் பங்குகள் 52 வாரங்களுக்கு பிறகு உச்சம் தொட்டுள்ளது.

தேசிய பங்கு சந்தையில் சன் டிவி நெட்வொர்க் பங்குகள் 26 சதவீதம் உயர்ந்து ரூ.694க்கு உயர்ந்தது. மும்பை பங்கு சந்தையில் 52 வார உச்சமாக, பங்கு 698.65 ரூபாயாக உயர்ந்தது. நாளின் இறுதியில் இது ரூ.683.85 என்று லேசான சரிவை சந்தித்தது.
மாறன் சகோதரர்கள் உள்ளிட்ட ஏர்செல்-மேக்சிஸ் முறைகேடு வழக்கில் தொடர்புள்ள அனைவரையும் டெல்லி சிறப்பு நீதிமன்றம் விடுதலை செய்து நேற்று தீர்ப்பளித்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications