சன் டி.வி.யின் 33 சேனல்களின் லைசென்ஸை ரத்து செய்யவும் கோருகிறது உள்துறை அமைச்சகம்!
டெல்லி: சன் டி.வி. குழுமத்தின் 33 சேனல்களின் லைசென்ஸ்களை ரத்து செய்யவும் ஒளிபரப்பு அமைச்சகத்திடம் கோருவது என உள்துறை அமைச்சகம் முடிவெடுத்துள்ளதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.
சன் டி.வி. குழுமத்தின் 33 சேனல்களின் ஒளிபரப்புக்கான லைசென்ஸை புதுப்பிக்க மத்திய அரசிடம் அந்நிறுவனம் விண்னப்பித்திருந்தது. ஆனால் உள்துறை அமைச்சகம் சன் டி.வி. குழுமத்துக்கு பாதுகாப்பு அனுமதி சான்றிதழ் வழங்க மறுத்துவிட்டது.

சன் டி.வியின் அதிபர் கலாநிதி மற்றும் அவரது சகோதரர் தயாநிதி மாறன் ஆகியோர் மீதான வழக்குகள் நிலுவையில் இருப்பதை சுட்டிக்காட்டி பாதுகாப்பு அனுமதி சான்றிதழை உள்துறை அமைச்சகம் வழங்க மறுத்திருந்தது. இருப்பினும் இந்த நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்யுமாறு உள்துறை அமைச்சகத்தை ஒளிபரப்பு அமைச்சகம் கேட்டுக் கொள்ள வாய்ப்பிருக்கிறது.
ஏற்கெனவே இதே சன் டி.வி. குழுமத்தின் 40 எஃப்.எம்.களின் ஒளிபரப்புகளுக்கும் பாதுகாப்பு அனுமதி சான்றிதழை உள்துறை அமைச்சகம் மறுத்த போது ஒளிபரப்புத் துறை அமைச்சர் அருண்ஜேட்லி தலையிட்டு சான்றிதழ் வழங்க கோரியிருந்தார். ஆனால் அவரது கோரிக்கை மீது உள்துறை அமைச்சகம் எந்த முடிவையும் எடுக்காமல் இருந்தது.
இதேபோல் தற்போதும் அருண்ஜேட்லி தலையிடக் கூடும் எனவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் அடுத்த கட்டமாக சன் டிவியின் 33 சேனல்களின் ஒளிபரப்பு லைன்சென்ஸ்களை ரத்து செய்யலாம் எனவும் ஒளிபரப்புத் துறை அமைச்சகத்துக்கு பரிந்துரைக்க உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளதாக ஒன் இந்தியா இணையதளத்துக்கு உள்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனால் சன் டிவி குழுமத்துக்கு எதிரான உள்துறை அமைச்சகத்தின் வரும் நாட்களில் தீவிரமடையக் கூடும் எனவும் கூறப்படுகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications