தரூர், சுனந்தா இடையே யார் அந்த 'கேட்டி': சு.சாமி விளக்கம்
டெல்லி: முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூர் அவருடைய மனைவி சுனந்தா கேட்டி என்ற பெண் பற்றி சண்டை போட்டது குறித்து பாஜக தலைவர் சுப்பிரமணியன் சாமி ட்வீட் செய்துள்ளார்.
முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூர் பாகிஸ்தானைச் சேர்ந்த பத்திரிக்கையாளரான மெஹர் தராருடன் தொடர்பு வைத்திருப்பதாக அவரின் மனைவி சுனந்தா புஷ்கர் கடந்த ஆண்டு தெரிவித்தார். இதையடுத்து அவர் டெல்லியில் உள்ள லீலா பேலஸ் ஹோட்டலில் பிணமாகக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சுனந்தா விஷம் கொடுத்து கொலை செய்யப்பட்டுள்ளதாக டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் சுனந்தா உயிருடன் இருக்கையில் அவருக்கும், தரூருக்கும் இடையே கேட்டி என்ற பெண்ணால் தகராறு ஏற்பட்டதாக அவர்கள் வீட்டு பணியாள் நாராயண் சிங் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து அந்த கேட்டி யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில் இது குறித்து பாஜக தலைவர் சுப்பிரமணியன் சாமி ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
தரூர் தம்பதியினர் யாரோ கேட்டி என்பவர் பற்றி சண்டை போட்டதாக அவர்களின் பணியாள் நாராயண் தெரிவித்துள்ளார். அது 'கேத்தி' கேத்ரீனின் சுறுக்கம் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications