சுனந்தாவை கொன்ற விஷம் எது?: உடற்கூறுகளை லண்டனுக்கு அனுப்பும் போலீஸ்
டெல்லி: முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கரின் குடல் உள்ளிட்ட உடற்கூறுகள் தடயவியல் பரிசோதனைக்காக லண்டனுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.
முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் டெல்லியில் உள்ள லீலா பேலஸ் ஹோட்டலில் பிணமாகக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்நிலையில் சுனந்தா விஷம் வைத்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாக எய்ம்ஸ் மருத்துவர்கள் குழு கடந்த மாதம் போலீசாரிடம் அறிக்கை அளித்தது. இதையடுத்து போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்த வழக்கை விசாரிக்க சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. சுனந்தா பொலோனியம் எனப்படும் கதிர்வீச்சு தன்மை கொண்ட விஷம் கொடுத்து கொலை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவரது உடலில் பொலோனியம் 210, தாலியம், பாம்பு விஷம், நீரியம் ஓலியாண்டர் ஆகியவை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து சுனந்தாவின் மரணத்திற்கு காரணமான விஷத்தை கண்டறிய அவரது உடற்கூறுகளை இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள தடயவியல் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்க சிறப்பு விசாரணை குழு முடிவு செய்துள்ளது.
சுனந்தா இறப்பதற்கு முன்பு அவர் எந்த நோயாலும் அவதிப்படவில்லை என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications