அடடா.. தேசிய கீதத்தைத் தப்பா பாடிட்டாராமே சன்னி லியோன்.. போலீஸில் புகார்!
டெல்லி: மும்பையில் நடந்த கபடி போட்டி நிகழ்ச்சியில் தேசிய கீதத்தை தவறாக பாடியதாகக் கூறி நடிகை சன்னி லியோன் மீது டெல்லி போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த வியாழக்கிழமை மும்பையில் ப்ரோ கபடி லீக் போட்டிகள் நடந்தது. அந்த போட்டி துவங்கும் முன்பு தேசிய கீதம் பாடப்பட்டது. பாலிவுட் நடிகை சன்னி லியோன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தேசிய கீதத்தை பாடினார்.
இதற்காக அவர் சிறப்பு பயிற்சி எல்லாம் எடுத்தாராம்.

புகார்
மும்பை நிகழ்ச்சியில் சன்னி லியோன் தேசிய கீதத்தை தவறாக பாடியதாக உல்லாஸ் என்பவர் டெல்லியில் உள்ள அசோக் நகர் காவல் நிலையத்தில் அவர் மீது புகார் அளித்துள்ளார்.

என்ன தவறு?
சன்னி தேசிய கீதத்தை பாடும்போது வார்த்தைகளை சரியாக உச்சரிக்கவில்லை என்று உல்லாஸ் தனது புகார் மனுவில் தெரிவித்துள்ளார். பாடும் முன்பு சன்னி முறையாக பயிற்சி எடுத்திருக்க வேண்டும் என்கிறார் உல்லாஸ்.

சன்னி
ஒரு பிரபலமான நடிகையான சன்னி தேசிய கீதத்தை தவறாக பாடினால் அது அவரது ரசிகர்களை பாதிக்கும் என்று உல்லாஸ் தெரிவித்துள்ளார். இதனால் சன்னிக்கு சட்ட சிக்கல் ஏற்பட்டுள்ளது.

அமிதாப் பச்சன்
முன்னதாக உல்லாஸ் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் மீதும் போலீசில் புகார் அளித்தார். கொல்கத்தாவில் இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் மோதிய டி20 போட்டியின் துவக்க விழாவில் அமிதாப் தேசிய கீதத்தை தவறாக பாடியாக அவர் மீது புகார் அளித்தார் உல்லாஸ்.
வீடியோ
மும்பை நிகழ்ச்சியில் சன்னி லியோன் தேசிய கீதம் பாடியபோது எடுக்கப்பட்ட வீடியோ இது தான். நீங்கள் பாருங்க.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications