ஐபிஎல் கேஸ்: பிசிசிஐ தலைவர் பதவிக்கு ஜனவரி 31 வரை தேர்தல் நடத்தக் கூடாது - சுப்ரீம் கோர்ட்
டெல்லி: ஐபிஎல் மேட்ச் பிக்ஸிங் வழக்கு முடியும் வரை இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவர் பதவிக்கு தேர்தல் நடத்தக் கூடாது என்று கூறியுள்ள உச்சநீதிமன்றம் 2015ம் ஆண்டு ஜனவரி 31ம் தேதி வரை தேர்தலை தள்ளி வைத்து உத்தரவிட்டுள்ளது.
ஐ.பி.எல். கிரிக்கெட் மேட்ச் பிக்ஸிங் குறித்த முத்கல் கமிட்டி அறிக்கை மீதான வழக்கு விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் தாகூர், இப்ராகிம் கலிபுல்லா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்னிலையில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

விசாரணையின் போது நீதிபதிகள் கருத்து தெரிவிக்கையில், ஐ.பி.எல். சூதாட்ட விவகாரத்தில் இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் பதவியில் இருந்து ஒதுங்கி இருக்கும் என்.சீனிவாசன் இரண்டு பொறுப்பில் இருப்பதினால் நிலவும் முரண்பாடு உள்பட பல பிரச்சினைகள் இருக்கிறது. எனவே இந்த வழக்கு விசாரணை முடிய இன்னும் சில காலம் பிடிக்கும் என்றனர்.
இதையடுத்து என்.சீனிவாசன் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில்சிபல், இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் தேர்தல் நடத்த நிர்ணயிக்கப்பட்டு இருக்கும் டிசம்பர் 17-ம் தேதிக்குள் விசாரணை முடியாவிட்டால், இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். இதேபோல் கிரிக்கெட் வாரியம் சார்பில் ஆஜரான வக்கீல் சுந்தரம் வாதிடுகையில் இந்திய கிரிக்கெட் வாரிய தேர்தல் நடத்துவதற்கு 3 வாரங்களுக்கு முன்பே உறுப்பினர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டியது அவசியம். எனவே ஜனவரி 31-ம் தேதி வரை தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என்று வற்புறுத்தினார்.
முன்னதாக கபில் சிபல் வாதிடுகையில், ஐ.பி.எல். வழக்கு முடியும் வரை இந்திய கிரிக்கெட் வாரிய கூட்டத்திலோ, ஐ.பி.எல். ஆட்சி மன்ற குழு கூட்டத்திலோ கலந்து கொள்ளாமல் ஒதுங்கி இருக்க என்.சீனிவாசன் தயார். அதற்கான உத்தரவாதத்தை எழுத்துபூர்வமாகவும் தாக்கல் செய்யவும் தயாராக இருக்கிறோம் என்று குறிப்பிட்டார். இதனை அடுத்து இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் தேர்தலை ஜனவரி 31-ம் தேதி வரை தள்ளி வைக்க நீதிபதிகள் ஒத்துக்கொண்டனர்.
வாரிய தலைவர் தேர்தல் தேதி 3-வது முறையாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த வழக்கு வருகிற 15 ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications