வன்கொடுமை சட்டத் தீர்ப்புக்கு தடை விதிக்க மறுப்பு… தீர்ப்பை தவறாக பார்ப்பதாக சுப்ரீம் கோர்ட் வேதனை
எஸ்சி- எஸ்டி பிரிவினர் பாதுகாப்புக்கான வன்கொடுமை தடுப்பு சட்டத்துக்கு எதிரான சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை எதிர்த்து பாரத் பந்த் நடக்கிறது. தீர்ப்புக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுத்துள்ளது
Recommended Video

டெல்லி: எஸ்சி-எஸ்டி பிரிவினருக்கு எதிரான வன்கொடுமை சட்டம் தொடர்பான தீர்ப்புக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுத்துள்ளது. 10 நாட்களில் விசாரிப்பதாக கூறியுள்ள சுப்ரீம் கோர்ட், தீர்ப்பு தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்துள்ளது.
எஸ்சி - எஸ்டி பிரிவினருக்கு எதிரான பாகுபாட்டை தடுப்பதற்காக வன்கொடுமை தடுப்பு சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த சட்டத்தின்படி, குற்றம் செய்ததாக புகார் வந்ததும், குற்றம் சாட்டப்பட்டவரை கைது செய்ய முடியும்.

ஆனால், இந்த சட்டத்தை தவறாகப் பயன்படுத்தி, நேர்மையான அதிகாரிகள் கைது செய்யப்படுவதால் அரசுப் பணிகள் பாதிக்கப்படுவதாகக் கூறி, அரசு அதிகாரிகளை கைது செய்வதற்கு தடை விதித்து, மார்ச் 20ல் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு அளித்தது.
இந்த தீர்ப்பு வன்கொடுமை தடுப்பு சட்டத்துக்கு எதி்ராக உள்ளது என்று பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். தலித் கட்சிகள் மற்றும் அமைப்புகள் சார்பில் பாரத் பந்த் நடந்து வருகிறது.
உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம் உள்பட 10 வட மாநிலங்களில் பந்த் தொடர்பான போராட்டங்கள் தீவிரமாக உள்ளன, அனைத்து எதிர்க்கட்சிகளும் போராட்டத்தில் இறங்கியுள்ளன. இந்த போராட்டத்தின்போது நடந்த வன்முறைகளில், 9 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர்.
குறிப்பாக பாஜ ஆளும் மத்திய பிரதேசம் மற்றும் உத்தர பிரதேசத்தில் போராட்டம் தீவிரமாக உள்ளது. அங்கு ராணுவம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு எதிராக பிரதமர் மோடி அரசு எதையும் செய்யவில்லை என்று எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றன.
இந்த நிலையில், வன்கொடுமை தடுப்பு சட்டம் தொடர்பான தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த வழக்கை அவசரமாக விசாரிக்க வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தியது.
அதையேற்று சற்று முன் விசாரித்த சுப்ரீம் கோர்ட், தீர்ப்புக்கு தடை விதிக்க முடியாது என்று கூறியுள்ளது. 10 நாட்களில் விசாரிப்பதாக கூறியுள்ள சுப்ரீம் கோர்ட், தீர்ப்பு தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது என்று கூறியுள்ளது.
வன்கொடுமை சட்டத்தை நாங்கள் எதிர்க்கவில்லை. அதே நேரத்தில் அப்பாவி மக்கள் பாதிக்கக் கூடாது என்பது தான் எங்களுடைய நோக்கம் என்று சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது.
-
கடன் சுமை டூ வங்கி இருப்பு! 12 வருடத்தில் விவசாயிகளின் தலையெழுத்தை மாற்றிய கிசான் சம்ரித்தி திட்டம் -
வெங்காய விவசாயிகளுக்கு நற்செய்தி! கொள்முதல் விலையை உயர்த்திய மத்திய அரசு.. இன்று முதல் அமலாகிறது! -
தாமிரபரணி ஆற்றில் ஜாலியோ ஜாலி.. ட்ரோன் கேமராவில் சிக்கிய நவத்திருப்பதி யானைகள் -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications