கலப்பு திருமணம் செய்தோரின் குழந்தைக்கு "காந்தி ஜாதி" கோரிய வழக்கு தள்ளுபடி!
டெல்லி: கலப்பு திருமணம் செய்தவர்களின் குழந்தைகளுக்கு காந்தி என்ற பெயரில் ஜாதி சான்றிதழ் வழங்கக் கோரி தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்துள்ளது.
:சேலத்தை சேர்ந்த காந்தியவாதி வேலு என்பவர் உச்ச நீதிமன்றத்தில் பொது நல மனு ஒன்று தாக்கல் செய்தார். அதில், இந்துக்களில் 9,500 ஜாதிகள் உள்ளன. முஸ்லிம்களிலும் பல உட்பிரிவுகள் உள்ளன. நாட்டின் அடிமைத்தனம் நிலவியதற்கு ஜாதிதான் காரணமாக இருந்தது. ஜாதியில்லாத சமுதாயத்தை உருவாக்க சில மாற்றங்கள் செய்ய வேண்டும். கலப்பு திருமண ஜோடிகளுக்கு பிறக்கும் குழந்தைகள் ஜாதி ரீதியாக சில சிக்கல்களை சந்திக்கின்றனர்.
இதனால் கலப்பு திருமணம் செய்தவர்களின் குழந்தைகளுக்கு காந்தி என்ற ஜாதி பெயரை வழங்க வேண்டும். இது ஜாதி இல்லாத சமுதாயம் உருவாக உதவும் என்று கூறியிருந்தார்.
இந்த மனுவை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம், நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான பெஞ்ச் விசாரித்தது. அப்போது நீதிபதிகள் கூறுகையில், இந்த விஷயத்தில் தலையிட நீதிமன்றம் விரும்பவில்லை. இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இது நல்ல நோக்கம் என்பதால், மனுதாரர் இது குறித்து மத்திய அரசிடம் முறையிடலாம் என்றனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications