ஓரினச் சேர்க்கை தீர்ப்பு: மத்திய அமைச்சர்களின் கருத்துகள் ஏற்புடையது அல்ல - உச்ச நீதிமன்றம்!

ஓரினச் சேர்க்கை குற்றம் அல்ல என்று டெல்லி உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பினை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம் அந்த தீர்ப்பினை ரத்து செய்தது.
இந்திய தண்டனை சட்டம் பிரிவு 377-ன் கீழ் ஓரினச்சேர்க்கை கிரிமினல் குற்றம்தான், அந்த சட்டப்பிரிவு இருக்கிறவரை ஓரினச்சேர்க்கையை குற்றம் அல்ல என்று கூற முடியாது என தனது தீர்ப்பில் உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தி இருந்தது.
இவ்விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ஓரினச்சேர்க்கைக்கு எதிரான தீர்ப்பு ஏமாற்றம் அளிப்பதாக கூறினார். இதேபோல் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், தீர்ப்பு தவறானது. ஏமாற்றம் அளிக்கிறது. இதை சரிசெய்வதற்கான எல்லா வாய்ப்புகளும் ஆராயப்படும். இந்த தீர்ப்பினை மறுபரிசீலனை செய்யுமாறு சீராய்வு மனு அல்லது நிவாரண மனுவை மத்திய அரசு தாக்கல் செய்ய வேண்டும். அதை 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்க வேண்டும். இந்த விவகாரத்தில், தற்போதைய சமூக, நல்லொழுக்க மதிப்பீடுகளை கவனத்தில் கொண்டிருக்க வேண்டும் என்றார்.
மேலும் இந்த விவகாரத்தில், நாடாளுமன்றம் உரிய முடிவை எடுக்கும் என்று நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கமல்நாத் கருத்து தெரிவித்தார்.
இந்நிலையில், ஓரினச் சேர்க்கை வழக்கு தொடர்பான தீர்ப்பு விவகாரத்தில் மத்திய அமைச்சர்கள் தெரிவித்த கருத்துக்கள் ஏற்புடையது இல்லை என்று கூறி உச்சநீதிமன்றம் இன்று தனது அதிருப்தியை தெரிவித்துள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications