அவுட்டான இம்ரான் கான் - நம்பிக்கையில்லா தீர்மானம் ரத்து செல்லாது என பாக். உச்சநீதிமன்றம் தீர்ப்பு

Subscribe to Oneindia Tamil

இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் ஆளும் இம்ரான் கான் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை சபாநாயகர் ரத்து செய்தது செல்லாது என பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை வழங்கி இருக்கிறது.

பாகிஸ்தானில் பொருளாதார தேக்க நிலைக்கு இம்ரான் கானின் மோசமான அணுகுமுறையே காரணம் என்ற குற்றச்சாட்டை முன் வைத்த எதிர்கட்சிகள், அவர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தினர்.

இதனை தொடர்ந்து பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தனர். கடந்த ஞாயிறு அன்று நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பு நடைபெறுவதாக இருந்தது.

இம்ரான் கானின் கடைசி பந்து

இம்ரான் கானின் கடைசி பந்து

342 இடங்களை கொண்ட பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க 172 எம்.பிக்களின் ஆதரவு இம்ரான் கானுக்கு தேவை. ஆனால், கூட்டணி கட்சிகளும், தெஹ்ரிக் கட்சிகளின் எம்.பிகளுமே இம்ரான் கானுக்கு எதிராக நின்றதால் நம்பிக்கையில்லா தீர்மானத்தில் அவர் வெற்றிபெறுவதற்கான சாத்தியம் குறைவாகவே பார்க்கப்பட்டது. ஆனால், முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கானோ கடைசி பந்து வரை நின்று ஆடுவேன் என தெரிவித்தார். தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய மறுத்த இம்ரான் கான் நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்கொள்வேன் என அறிவித்தார்.

நம்பிக்கையில்லா தீர்மானம் ரத்து

நம்பிக்கையில்லா தீர்மானம் ரத்து

ஆனால் இதை சமாளிக்க தன்னிடம் மேலும் ஒரு திட்டம் உள்ளதாக கூறினார் இம்ரான் கான். இந்தநிலையில் ஞாயிறு அன்று பாகிஸ்தான் நாடாளுமன்றம் கூடியது. அப்போது பேசிய பாகிஸ்தான் சட்ட அமைச்சர் பவாத் உசேன், இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் பின்னணியில் வெளிநாட்டு சதி இருப்பதாக குற்றம்சாட்டினார். இதனை ஏற்ற பாகிஸ்தான் துணை சபாநாயகர், நம்பிக்கையில்லா தீர்மானத்தை ரத்து செய்தார்.

 பாகிஸ்தான் நாடாளுமன்றம் கலைப்பு

பாகிஸ்தான் நாடாளுமன்றம் கலைப்பு

இதன் பின்னர் பேசிய இம்ரான் கான், "அந்நிய சக்திகளுடன் தொடர்பு வைத்திருப்பதாக சந்தேகிக்கப்படும் ஊழல்வாதிகள் நாட்டை ஆளக்கூடாது. நான் ஏற்கனவே குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதி இருக்கிறேன். பாகிஸ்தானில் அரசை கலைத்து விட்டு புதிதாக தேர்தலை நடத்த வலியுறுத்தி உள்ளேன்." என்றார்.

இதனை தொடர்ந்து பாகிஸ்தான் குடியரசுத் தலைவர் ஆரிஃப் அல்வி பாகிஸ்தான் நாடாளுமன்றத்தை கலைப்பதாக அறிவித்ததுடன் இம்ரான் கானே காபந்து பிரதமராக நீடிப்பார் என்றும் 90 நாட்களில் தேர்தலை நடத்த வேண்டும் எனவும் அறிவித்தார்.

உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

இந்த நிலையில் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் அரசுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தை துணை சபாநாயகர் ரத்து செய்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் எதிர்க்கட்சிகள் வழக்கு தொடர்ந்தனர். இதனை அடுத்து பாகிஸ்தான் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உமர் அடா பண்டியால், அனைத்து நீதிபதிகளின் கூட்டத்தை கூட்டினார். அதில், துணை சபாநாயகர் முடிவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் தொடர்ந்த வழக்கை விசாரிக்க சிறப்பு அமர்வு அமைக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து இன்று வழக்கை விசாரித்த பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் நம்பிக்கையில்லா தீர்மானத்தை துணை சபாநாயகர் ரத்து செய்தது செல்லாது என தீர்ப்பளித்தது. மேலும் பாகிஸ்தான் நாடாளுமன்றம் கலைப்பு தொடர்பான குடியரசுத் தலைவரின் உத்தரவையும் உச்சநீதிமன்றம் ரத்து செய்தது

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+