மும்பை குண்டுவெடிப்பு வழக்கு: யாகூப் மேமனின் தூக்கை நிறைவேற்ற சுப்ரீம் கோர்ட் தடை!
டெல்லி: மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கு குற்றவாளி யாகூப் மேமனின் தூக்கு தண்டனையை நிறைவேற்ற உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. தூக்கு தண்டனைக்கு எதிரான மேமனின் மனுவை அரசியல் சாசன பெஞ்ச் விசாரிக்கும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

1993ஆம் ஆண்டு நிழல் உலக தாதா தாவூத் கும்பல் மும்பையை நாசம் செய்ய தொடர் குண்டுவெடிப்புகளை அரங்கேற்றியது. இதில் நூற்றுக்கணக்கானோர் பலியாகினர்.
இந்த வழக்கில் யாசிப் அப்துல் ரஸ்சக் மேமனுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. தலைமறைவாக உள்ள நிழல் உலக தாதா டைகர் மேமனின் சகோதரர்தான் யாகூப் மேமன்.
தமக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரி யாகூப் மேமன், ஜனாதிபதியிடன் கருணை மனு அளித்திருந்தார். தற்போது யாகூப் மேமன் நாக்பூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
மகாராஷ்டிர அரசுடன் கலந்த ஆலோசித்த அண்மையில் ஜனாதிபதியால் இந்த கருணை மனு நிராகரிக்கப்பட்டதாக கூறப்பட்டது. இதை எதிர்த்து யாகூப் மேமன் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், யாகூப் மேமனின் தூக்கை நிறைவேற்ற இடைக்கால தடை விதித்தது. அத்துடன் இந்த மனுவை அரசியல் சாசன பெஞ்ச் விசாரிக்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
-
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications