'பொருளாதார ரீதியில் 10% இட ஒதுக்கீடு செல்லும்': உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பு
பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு செல்லும் என உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.
ஐந்து நீதிபதிகள் அமர்வில் ஒருவரான நீதிபதி தினேஷ் மகேஷ்வரி, பொருளாதார நிலையில் பின்தங்கியவர்களுக்கான இடஒதுக்கீட்டிற்கான 103வது அரசமைப்பு திருத்தம் செல்லுபடியாகும் என்றும் அது அரசமைப்பின் அடிப்படை கட்டமைப்பை மீறவில்லை என்றும் கூறியுள்ளார்.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உதய் உமேஷ் லலித் மற்றும் நீதிபதி தினேஷ் மகேஷ்வரி தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு, பொருளாதார நிலையில் பின்தங்கியவர்களுக்கான இட ஒதுக்கீடு அரசமைப்பின் அடிப்படை கட்டமைப்பை மீறவில்லை எனத் தீர்ப்பளித்துள்ளனர்.
இந்த உச்சநீதிமன்ற தீர்ப்பு, 103வது அரசமைப்பு திருத்த சட்டத்தின் செல்லுபடியை உறுதி செய்கிறது.
- பொருளாதார ரீதியில் இட ஒதுக்கீடு: இதுதான் தமிழக அரசின் நிலைப்பாடு
- பொருளாதார ரீதியில் இட ஒதுக்கீடு: ஆதரித்தது யார், எதிர்த்தது யார்?
- நரேந்திர மோதி அரசு முஸ்லிம், கிறிஸ்தவ தலித்துகளுக்கு இட ஒதுக்கீடு தர உண்மையாகவே விரும்புகிறதா?
"இட ஒதுக்கீடு என்பது சமூக மற்றும் பொருளாதார ரீதியாக பின் தங்கியவர்களுக்கு மட்டுமல்ல, பிற்படுத்தப்பட்ட எந்தவொரு பிரிவினருக்குமான உறுதியான நடவடிக்கை. எனவே, பொருளாதார அடிப்படையில் மட்டுமே இட ஒதுக்கீடு என்பது அரசமைப்பை மீறாது.
பட்டியல் சாதிகள்/பழங்குடிகள் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்களை பொருளாதாரரீதியாக பின்தங்கி இருப்பவர்களுக்கான இட ஒதுக்கீடுகளில் இருந்து விலக்குவது அரசமைப்பு ரீதியாக செல்லுபடியாகும். கிடைக்கக்கூடிய அனைத்து இடங்களிலும் 50% கூடுதலாக பொருளாதாரரீதியாக பின்தங்கியுள்ளவர்களுக்கு இடஒதுக்கீடு என்பது அரசமைப்புப்படி செல்லுபடியாகும். ஏனெனில் உச்சவரம்பு என்பது நெகிழ்வானது, அது சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீட்டிற்கு மட்டுமே பொருந்தும்," என்று நீதிபதி தினேஷ் மகேஷ்வரி கூறியுள்ளார்.
இருப்பினும், பெரும்பான்மையான தீர்ப்போடு நிதிபதி ரவிந்திர பட் உடன்படவில்லை.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்















Click it and Unblock the Notifications