5வது மாடிக்கு வந்து.. இடம் பார்த்து.. கீழே குதித்து தற்கொலை செய்த தொழிலதிபர்.. வைரலாகும் வீடியோ

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    5வது மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்த தொழிலதிபர்.. வைரலாகும் வீடியோ

    அகமதாபாத்: குஜராத்தின் சூரத்தைச் சேர்ந்த 51 வயதான தொழிலதிபர் ஒருவர்ஹோட்டலின் 5வது மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்துள்ளார். அதை தடுக்க முயலாமல் பொதுமக்கள் வீடியோ எடுத்துள்ளனர்.

    இந்த சம்பவம் செப்டம்பர் 25 ஆம் தேதி, வல்சாத் மாவட்டத்தின் வாபி நகரில் உள்ள ஹோட்டல் மகாராஜாவில் நடந்துள்ளது. அந்த ஹோட்டலின் ஐந்தாவது மாடியில் இருந்து தற்கொலை செய்ய கீழே குதித்துள்ளார் பியூஷ் பச்சிகர் என்ற தொழிலதிபர்.

    Surat businessman’s suicide jumping from hotel building, people makes video

    அதிர்ச்சியூட்டும் விஷயம் என்னவென்றால், அவர் பட்டப்பகலில் இவ்வாறு செய்தபோது, அதை வீடியோக்களாக எடுப்பதில் அப்பகுதி மக்கள் மும்முரமாக இருந்தனர். எனவே அவரைத் தடுப்பது பற்றி யாரும் கவலைப்படவில்லை. எந்த முயற்சியும் செய்யவில்லை. ஒரு சிலர் மட்டுமே, குதிக்காதீர்கள்.. குதிக்காதீர்கள் என சத்தம் போட்டுள்ளனர். ஆனால் பெரும்பாலானோர் வீடியோ எடுத்துள்ளனர்.

    அவர் குதித்த சில நிமிடங்களில், தற்கொலை பற்றிய பல வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட தொடங்கின. போலீசார் வந்து பியூஷ் உடலை போஸ்ட்மார்டத்திற்கு அனுப்பும் முன்பாகவே, இந்த வீடியோ வைரலாகியுள்ளது.

    ஹோட்டல் ஊழியர்கள் இறந்தவரின் ஆதார் அட்டையின் நகலை போலீசாரிடம் கொடுத்தனர். முந்தைய நாள் இரவு முதல் பியூஷ் அங்கேயே தங்கியிருந்தது உறுதியாகியுள்ளது.

    பியூஷ் பச்சிகர் சூரத்தின் மஹிதர்புரா பகுதியை சேர்ந்தவர். செப்டம்பர் 24 ஆம் தேதி வீட்டை விட்டு கிளம்பியுள்ளார். சில வேலைகளுக்காக வாபி செல்வதாக அப்போது அவர் தனது குடும்பத்தினரிடம் கூறியுள்ளார்.

    ஆயினும், இந்த தற்கொலை முன்கூட்டியே திட்டமிட்ட நடவடிக்கையாகத் தெரிகிறது. பியூஷ் நகை தொடர்பான வியாபாரம் செய்து வந்தவர்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+