வருமான வரி உச்சவரம்பு... பெரிய மாற்றம் ஏதுமில்லை!
டெல்லி: ரூ 2.5 லட்சம் முதல் 5 லட்சம் வரை வருமானம் பெறுவோருக்கு 5 சதவீதம் வரி குறைக்கப்பட்டுள்ளது. இதுவரை 10 சதவீதம் வரி செலுத்தியோர், இனி 5 சதவீதம் செலுத்த வேண்டும்.
இன்று 2017-க்கான மத்திய பட்ஜெட்டை சமர்ப்பித்தார் நிதியமைச்சர் அருண் ஜெட்லி. அதில் வருமான வரி உச்ச வரம்பு குறித்த அறிவிப்புகளை அவர் வெளியிட்டார்.

தனி நபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்பில் மாற்றமில்லை. அதே ரூ 2.5 லட்சம்தான் உச்ச வரம்பு. ரூ.2.5 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வருமானம் ஈட்டுவோர் அல்லது சம்பளம் பெறுவோருக்கு 10 சதவீதமாக இருந்த வரி, இப்போது 5 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
5 லட்சத்திலிருந்து 10 லட்சம் வரை வருவாய் உள்ளவர்களுக்கு ரூ 25 ஆயிரம் மற்றும் 20 சதவீத வரி (5 லட்சத்துக்கு மட்டும்).
10 லட்சத்துக்கு மேல் வருமானம் பெறுபவர்கள் ரூ 1.25 லட்சம் மற்றும் 30 சதவீதம் வரி செலுத்த வேண்டும் (ரூ 10லட்சம் போக மீதி உள்ள வருவாய்க்கு).
இந்த மூன்று பிரிவினருமே வருமான வரியுடன் 2 சதவீத கல்வி வரி மற்றும் 1 சதவீத மேல்நிலைப் பள்ளிக் கல்வி வரி செலுத்த வேண்டும்.
ரூ 50 லட்சம் முதல் 1 கோடி வரை ஆண்டு வருமானம் உள்ளவர்களுக்கு மேற்கண்ட வரிகளுடன் 10 சதவீதம் கூடுதல் வரி விதிக்கப்பட்டுள்ளது. ரூ 1 கோடிக்கும் அதிகமான வருமானம் உள்ளவர்களுக்கு 15 சதவீதம் கூடுதல் வரி.
தனி நபர் வருமான வரி கணக்கு தாக்கல் படிவம் இனி ஒரே பக்கமாக இருக்கும்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications