Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சொன்னோம்.. செய்தோம்.. இது ரயில்வே அமைச்சரின் பெருமிதப் பட்டியல்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மத்திய ரயில்வே பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படும் நிலையில் மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு கடந்த ஆண்டு தான் சொன்னதில் பலவற்றை நிறைவேற்றியிருப்பதாக பெருமையுடன் ஒரு பட்டியலை ரயில்வே பட்ஜெட் இணையதளத்தில் போட்டுள்ளார்.

அதில் கடந்த ஆண்டு சொல்லப்பட்ட பல திட்டங்களின் நிலையை அவர் விவரித்துள்ளார்.

அதுகுறித்த ஒரு தொகுப்பு இதோ..

பல மொழியில் இ டிக்கெட்டிங்

பல மொழியில் இ டிக்கெட்டிங்

பல மொழிகளில் இ டிக்கெட்டிங் முறை இணையதளத்தில் அறிமுகப்படுத்தப்படும் என்று சொல்லியிருந்தோம். தற்போது அதில் இந்திப் பதிப்பு அமலாக்கப்பட்டு விட்டது.

தானியங்கி லான்டரிகள்

தானியங்கி லான்டரிகள்

தானியங்கி முறையில் துணிகளை துவைக்கும் வசதி அதிகரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி கூடுலதாக 6 தானியங்கி லான்டரிகள் நிறுவப்பட்டுள்ளன. மார்ச் 31ம் தேதிக்குள் மேலும் 4 லான்டரிகள் ஏற்படுத்தப்படும்.

டஸ்ட்பின்

டஸ்ட்பின்

ஏசி அல்லதா ரயில் பெட்டிகளிலும் பில்ட் இன் டஸ்ட் பின்கள் வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி புதிதாக வரும் பெட்டிகளில் அது ஏற்படுத்தப்பட்டுள்ளது. 5000 பழைய பெட்டிகளிலும் அதைச் செய்ய ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

ஹவுஸ் கீப்பிங் சேவை

ஹவுஸ் கீப்பிங் சேவை

ரயில்களில் ஹவுஸ் கீப்பிங் சேவையை விரிவுபடுத்துவோம் எனக் கூறியிருந்தோம். அதன்படி 74 ரயில்களில் அது செய்யப்பட்டுள்ளது. கூடுதலாக 400 ரயில்களில் மேற்கொள்ளப்படவுள்ளது. மொத்தமா தற்போது 1000 ரயில்களில் இந்த சேவை கிடைக்கிறது.

கழிவிலிருந்து மின்சாரம்

கழிவிலிருந்து மின்சாரம்

ரயில் நிலைய கழிவுகளை மின்சாரமாக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது. அதன்படி ஜெய்ப்பூர். டெல்லி ரயில் நிலையங்களில் இவற்றை அமைக்கத் திட்டமிடப்பட்டு டெண்டர் கோரப்பட்டுள்ளது.

எஸ்எம்எஸ் அலர்ட்

எஸ்எம்எஸ் அலர்ட்

ரயில்களின் வருகை, புறப்பாடு குறித்து எஸ்எம்எஸ் மூலம் அலர்ட் அனுப்பும் சேவை அறிவிக்கப்பட்டது. அது தற்போது ராஜ்தானி மற்றும் டுரன்டோ ரயில்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தண்ணீர் மெஷின்கள்

தண்ணீர் மெஷின்கள்

ரயில் நிலையங்களில் தண்ணீர் தரும் மெஷின்கள் அதிகரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி கூடுதலாக 2500 மெஷின்கள் பொருத்தப்பட்டுள்ளன.

பயோ டாய்லெட்டுகள்

பயோ டாய்லெட்டுகள்

பயோ டாய்லெட்டுகளை அதிகரிக்கும் திட்டத்தின் நடவடிக்கையாக தற்போது சோதனை ரீதியிலான முயற்சி திர்பூகர் - ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலில் மேற்கொள்லப்பட்டு வருகிறது.

ஹவுஸ் கீப்பிங் இயக்குநரகம்

ஹவுஸ் கீப்பிங் இயக்குநரகம்

ரயில் நிலையங்கள், பெட்டிகளை சுத்தமாக வைத்திருக்க தனி துறை ஏற்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி சுற்றுச்சூழல், ஹவுஸ் கீப்பிங் இயக்குநரகம் உருவாக்கப்பட்டுள்ளது.

கூடுதல் கழிப்பறைகள்

கூடுதல் கழிப்பறைகள்

650 கூடுதல் ரயில் நிலையங்களில் கழிப்பறைகள் நிறுவப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதில் 407 கழிப்பறைகள் நிறுவப்பட்டு விட்டன

தானியங்கி டிக்கெட் மெஷின்கள்

தானியங்கி டிக்கெட் மெஷின்கள்

நாடு முழுவதும் ரயில் நிலையங்களில் தானியங்கி டிக்கெட் மெஷின்கள் நிறுவ திட்டமிடப்பட்டது. அதில் 2000 மெஷின்களும், 225 காய்ன் பாக்ஸ் மெஷின்களும் நிறுவப்பட்டுள்ளன.

வைபை வசதி

வைபை வசதி

ரயில் நிலையங்களில் வைபை வசதி ஏற்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதில் 11 ரயில் நிலையங்களில் இது ஏற்படுத்தப்பட்டு விட்டது. வரும் டிசம்பர் மாதத்திற்குள் மேலும் 111 நிலையங்களில் இது ஏற்படுத்தப்படும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+