உடனே என்றால் உடனடியாகன்னு அர்த்தம்- சசி வக்கீலுக்கு சுப்ரீம் கோர்ட் சுளீர்!
பெங்களூரு நீதிமன்றத்தில் சரணடைய அவகாசம் கேட்ட சசிகலாவின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்தது.
டெல்லி: வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் 4 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா உடனடியாக பெங்களூரு நீதிமன்றத்தில் சரணடைந்தே ஆக வேண்டும் என உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக கூறிவிட்டது.
ஜெயலலிதா மீதான வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் கர்நாடகா அரசின் மேல்முறையீட்டு மனு மீது உச்சநீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது. அதில் ஜெயலலிதா குற்றவாளி; அவர் மரணடைந்ததால் தண்டனை இல்லை; அதேநேரத்தில் சசிகலா, இளவரசி, சுதாகரனுக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் விதித்த 4 ஆண்டு சிறை தண்டனை உறுதி செய்யப்படுகிறது என தீர்ப்பளிக்கப்பட்டது.

மேலும் சசிகலா உள்ளிட்டோர் உடனே நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் சசிகலா நேற்று பெங்களூரு நீதிமன்றத்தில் சரணடையவில்லை.
இதனிடையே உச்சநீதிமன்றத்தில் சசிகலா தரப்பில் சரணடைவதற்கான கால அவகாசம் கோரப்பட்டது. இதை நிராகரித்த நீதிபதி பினாக்கி சந்திரகோஷ், தீர்ப்பில் மிகத் தெளிவாக கூறியிருக்கிறோம். அதில் எந்த மாற்றமும் இல்லை. நேற்றைய தீர்ப்பில் உடனடியாக சரணடைய வேண்டும் என கூறியுள்ளோம். உடனடியாக என்றால் உடனடியாக சரணடைய வேண்டும் என்றுதான் அர்த்தம் என காட்டமாக கூறினார்.
இதனால் வேறுவழியே இல்லாமல் சசிகலா இன்று பெங்களூரு நீதிமன்றத்தில் சரணடைவதற்காக புறப்பட்டுச் சென்றார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications