மோடி சிறந்த ராஜதந்திரி- சுஷ்மா ஸ்வராஜ்; கேலிக்கூத்தான சாகச பாக். பயணம்- காங் கண்டனம்!!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி திடீரென அதிரடியாக பாகிஸ்தான் செல்வதாக அறிவித்திருப்பது இந்தியாவில் மட்டுமின்றி சர்வதேச அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானுக்கு செல்வதாக அறிவித்திருப்பதன் மூலம் சிறந்த ராஜதந்திரியாக பிரதமர் மோடி திகழ்கிறார் என வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் புகழாரம் சூட்டியுள்ளார். ஆனால் காங்கிரஸ் கட்சியோ மிகக் கடுமையாக விமர்சித்துள்ளது.

Sushma lauds Modi's 'surprise' visit to Pak; Cong ridicules

ரஷ்யா, ஆப்கானிஸ்தானுக்கு பயணம் மேற்கொண்டிருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. இன்று ஆப்கானிஸ்தான் பயணத்தை முடித்துவிட்டு பிரதமர் மோடி நாடு திரும்புவதற்கு முன்பாக பாகிஸ்தானுக்கும் அதிரடியாக செல்லப் போவதாக ட்விட்டர் மூலம் அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

பிரதமர் மோடியின் இந்த துணிச்சலான நடவடிக்கை மூலம் ஒரு சிறந்த ராஜதந்திரியாக திகழ்கிறார்; அண்டை நாடுகளுடன் இப்படித்தான் நல்லுறவை வளர்க்க வேண்டும் என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் ட்விட்டரில் புகழாரம் சூட்டியுள்ளார்.

ஆனால் காங்கிரஸ் கட்சி இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அக்கட்சியின் மூத்த தலைவர் மணீஸ் திவாரி கூறுகையில், பிரதமர் மோடியின் இந்த சாகச பயணத்தால் நாட்டின் பாதுகாப்பில் மிக மோசமான விளைவுகள் ஏற்பட போகிறது; இந்த பயண முடிவானது விபரீதமானது மட்டுமல்ல.. கேலிக்குரியதும் ஆகும்.

பாகிஸ்தானுடன் திடீரென இப்படி நட்பு பாராட்டும் வகையில் என்ன மாற்றம்தான் நிகழ்ந்துவிட்டது என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இதேபோல் ஆம் ஆத்மி கட்சியும், ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக் காலத்தில் பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்தக் கூடாது என கூறி வந்த பிரதமர் மோடி இப்போது மட்டும் எப்படி பேச்சுவார்த்தை நடத்துகிறார் என கேள்வி எழுப்பியுள்ளது.

இளைஞர் காங். போராட்டம்

இதனிடையே மோடியின் பாகிஸ்தான் பயணத்துக்குக் கண்டனம் தெரிவித்து டெல்லியில் இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் போராட்டம் நடத்தினர்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+