ஈராக்கில் 39 இந்தியர்கள் படுகொலை.. விஷயம் தெரிந்தும் வெளியிடாத சுஷ்மா சுவராஜ்.. என்ன நடந்தது?
ஈராக்கில் ஐஎஸ் தீவிரவாதிகள் கடத்திய 39 இந்தியர்களும் படுகொலை செய்யப்பட்டுவிட்டதாக சுஷ்மா சுவராஜ் தகவல் தெரிவித்துள்ளார்.
Recommended Video

டெல்லி: ஈராக்கில் ஐஎஸ் தீவிரவாதிகள் கடத்திய 39 இந்தியர்களும் படுகொலை செய்யப்பட்டுவிட்டதாக சுஷ்மா சுவராஜ் தகவல் தெரிவித்துள்ளார். ஆனால் இவர்கள் உயிரோடு இருப்பதாக இவ்வளவு நாள் சுஷ்மா சுவராஜ் நம்பிக்கை அளித்து வந்தது சர்ச்சை ஆகியுள்ளது.
கடந்த 2014ல் ஈராக்கில் 39 இந்தியர்கள் காணாமல் போனார்கள். ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு அவர்களை பிணை கைதியாக பிடித்து வைத்து இருந்தது.
அப்போது அவர்கள் அனைவரும் ஈராக்கின் மொசூல் நகரில் அடைத்து வைக்கப்பட்டனர். அங்கு இருக்கு ஜெயிலில் அவர்கள் அடைத்து வைக்கப்பட்டு இருப்பதாக கூறப்பட்டது.

தெரியவில்லை
39 இந்தியர்கள் இருந்த இடத்தில் தீவிரவாதிகள் மோசமாக தாக்குதல் நடத்தினார்கள். இந்த நிலையில் அந்த ஜெயிலும் ஒரு மாதம் முன்பு தரைமட்டமாக்கப்பட்டது. ஆனால் அங்கு இருந்த 39 இந்தியர்கள் என்ன ஆனார்கள் என்று தெரியாமல் இருந்து வந்தது. இந்தியர்களுடன் அங்கு நிறைய வெளிநாட்டு மக்களும் இருந்துள்ளார்கள்.

தப்பித்தவர்
இந்த குழுவில் 40 வது நபராக சிக்கியவர்தான் ஹர்ஜீத் மாசி. இவர் முஸ்லீம் வேடமிட்டு ஈராக்கில் இருந்து தப்பித்து இந்தியா வந்தார். இவர் வந்த போதே, அங்கு இருந்து 39 இந்தியர்களும் கொல்லப்பட்டதை கண்ணால் பார்த்ததாக கூறினார். ஆனால் ஹர்ஜீத் பொய் சொல்வதாக சுஷ்மா கூறி நம்பிக்கையளித்தார்.

பொய்
மேலும் 4 வருடமாக அங்கே இருக்கும் இந்தியர்கள் உயிரோடு இருக்கிறார்கள், அவர்களை விரைவில் இந்தியா கொண்டு வருவோம் என்றும் நம்பிக்கையளித்தார். இதற்கான பேச்சுவார்த்தை நடக்கிறது, அவர்கள் உயிருக்கு எந்த பாதிப்பும் இருக்காது என்றும் கூறினார். ஆனால் அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்ற கேள்விக்கு பதிலளிக்கவில்லை.

ஏற்கனவே தெரியும்
ஆனால் இந்த 39 பேரும் மரணம் அடைந்தது ஏற்கனவே சுஷ்மாவிற்கு தெரியும் என்று கூறப்படுகிறது. 5 மாதங்களுக்கு முன்பே அவருக்கு இந்த தகவல் உறுதியாக தெரிந்துள்ளது. ஆனால் அதற்கு பின்பும் கூட இந்தியர்களின் குடும்பங்களுக்கு நம்பிக்கை அளித்து வந்துள்ளார்.

இவ்வளவு நாள் ஏன் சொல்லவில்லை
இவர்களின் மரணத்தை உடல்கூறு பரிசோதனை மூலம் உறுதி செய்யவே இவ்வளவு நாட்கள் சொல்லவில்லை என்று சுஷ்மா தெரிவித்துள்ளார். இதுகுறித்து காங்கிரஸ் உறுப்பினர்கள் பல முறை நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள். ஆனால் அப்போது எல்லாம் இந்த தகவலை அவர் தெரிவிக்கவே இல்லை.

கண்டுபிடித்தார்கள்
தற்போது உடல்கூறு பரிசோதனை, அவர்கள் பயன்படுத்திய ஆடை, ரத்த மாதிரி, உயரம் , புகைபடம் , அடையாள அட்டை என பல விஷயங்களை வைத்து 38 பேர் அடையாளம் காணப்பட்டு இருக்கிறார்கள். இன்னும் ஒருவர் உடல் 70 சதவிகிதம் அடையாளம் காணப்பட்டுள்ளது. அங்கு ஒரு பின் குவியலே இருப்பதாக கூறப்பட்டு இருக்கிறது.

எப்போது
இந்த 39 பேரும் பிணைக்கைதிகளாக பிடிக்கப்பட்ட சில மாதங்களிலேயே கொல்லப்பட்டுள்ளார்கள். இவர்கள் இருந்த ஜெயிலில் குண்டு போடப்பட்டது. அப்போதே இவர்கள் மரணம் அடைந்துவிட்டார்கள் என்று உறுதியாகி உள்ளது. இந்தியா கொண்டு வரப்படும் உடலும் மிகவும் மோசமான நிலையில் இருக்கும் என்றே கூறப்படுகிறது.
-
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications