பெர்லினில் பாஸ்போர்ட்டை தொலைத்த பெங்களூர் பெண்ணுக்கு உதவிய சுஷ்மா

Subscribe to Oneindia Tamil

பெர்லின்: பெங்களூரைச் சேர்ந்த பிளாக்கரான(blogger) அக்ரதா தினகரன் பெர்லினில் தனது பாஸ்போர்ட்டை தொலைத்துவிட்டு நின்றபோது அவருக்கு உதவ மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் முன்வந்துள்ளார்.

பெங்களூரைச் சேர்ந்தவர் அக்ரதா தினகரன். பிளாக்கரான அவர் ஜெர்மனிக்கு சென்றுள்ளார். தலைநகர் பெர்லினில் அவர் நேற்று தனது பாஸ்போர்ட், பணத்தை தொலைத்துவிட்டார். இதையடுத்து என்ன செய்வது என்று தெரியாத அவர் இது குறித்து ட்விட்டரில் தெரிவித்து யாராவது உதவி செய்யுங்களேன் என்று கேட்டிருந்தார்.

இது குறித்து அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

பெர்லினில் உள்ளேன். பாஸ்போர்ட், பணம் தொலைந்துவிட்டது. இந்திய தூதரகம் 9.30 மணி முதல் 12.30 மணிவரை தான் திறந்திருக்குமாம். யாருக்காவது ஏதாவது கான்டாக்ட் உள்ளதா என்று கேட்டிருந்தார்.

அதற்கு சிலர் பதில் அளித்திருந்தனர். பின்னர் இரவு பொழுதை கழிக்க இடம் கிடைத்துவிட்டதாக அவர் தெரிவித்திருந்தார்.

அக்ரதாவின் ட்வீட்டை பார்த்த மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் ட்விட்டரில் கூறியிருப்பதாவது, உங்களின் செல்போன் எண்ணை எனக்கு அளியுங்கள். எண்ணை தெரிவித்தால் யாராவது உங்களை தொடர்பு கொள்ளலாம் அல்லவா என்று கேட்டிருந்தார். இதை பார்த்த அக்ரதா சுஷ்மாவுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

இது பற்றி அக்ரதா ட்விட்டரில் தெரிவித்திருப்பதாவது,

இன்டர்நெட்டின் பவர் மற்றும் விரைந்து செயல்படும் அரசு. நன்றி என தெரிவித்துள்ளார்.

இந்திய தூதரகம் மற்றும் சுஷ்மா அக்ரதாவை தொடர்பு கொண்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+