இன்னா பிரதர் நீங்க.. உங்க வீட்டு ஃபிரிட்ஜ் ரிப்பேரானா நான் இன்னா பண்றது.. சுஷ்மா செம!
டெல்லி: மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் டிவிட்டரில் தனது வீட்டு ஃபிரிட்ஜ் சரியாக வேலை செய்யாதது குறித்து கூறிய ஒருவருக்கு, நான் மனிதர்களின் பிரச்சினை குறித்துத்தான் கவலைப்பட முடியும். ஃபிரிட்ஜ் ரிப்பேரானா நான் என்ன பண்றது என்று பதிலளித்து கலகலக்க வைத்துள்ளார்.
சுஷ்மா சுவராஜ் டிவிட்டரிலும் ஆக்டிவாக இயங்கி வருபவர். வெளிநாடுகளில் சிக்கலில் மாட்டிக் கொள்ளும் இந்தியர்கள் பலரும் டிவிட்டர் மூலமாக சுஷ்மாவின் உதவியை நாடி பலன் அடைந்துள்ளனர்.
@irvpaswan @SushmaSwaraj Dear Ministers, @Samsung_IN sold me a defective refrigerator, they r not ready to replace pic.twitter.com/G87Jwh6slD
— Venkat (@M_VenkatM) June 13, 2016
இந்த நிலையில் ஒரு கலகலப்பான உரையாடல் சுஷ்மாவின் டிவிட்டர் பக்கத்தில் நடந்துள்ளது. வெங்கட் என்பவர் சுஷ்மாவிடம் டிவிட்டர் மூலமாக ஒரு உதவி கோரியிருந்தார். கூடவே இன்னொரு மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வானின் உதவியையும் அவர் நாடியிருந்தார்.
அதில் அவர், அன்பு அமைச்சர்களே, நான் சாம்சங் நிறுவனத்தின் ரெப்ஜிரிரேட்டரை வாங்கியிருந்தேன். அது பழுதாக உள்ளது. ஆனால் மாற்றித் தர மாட்டேன் என்கிறார்கள் என்று கூறியிருந்தார் வெங்கட்.
Brother I cannot help you in matters of a Refrigerator. I am very busy with human beings in distress. https://t.co/cpC5cWBPcz
— Sushma Swaraj (@SushmaSwaraj) June 13, 2016
இந்த டிவிட்டுக்கு மின்னல் வேகத்தில் பதிலளித்துள்ளார் சுஷ்மா. அதில் அவர், பிரதர், என்னால் ரெப்ஜிரேட்டர் விஷயத்தில் எல்லாம் உதவ முடியாது. நான் சிக்கலில் இருக்கும் மனிதர்களுக்கு உதவுவதில் நான் ரொம்ப பிசியாக இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.
செம!
-
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
10 கோடி வீட்டை 100 கோடிக்கு விற்ற நடிகை மீனா.. சென்னையில் நில மதிப்பு ராக்கெட் போல் உயர்ந்த இடங்கள் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
Tamil New Year Wishes in Tamil: சித்திரை திருநாளில் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் பகிர அழகிய படங்கள் -
ஜனநாயகன் லீக்.. இயக்குநர் அமீர் கருத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு.. ஆர்கே செல்வமணி விளக்கம்












Click it and Unblock the Notifications