ஊழல் புகாரில் சிக்கி லண்டனுக்கு ஓடிய லலித் மோடிக்கு உதவிய சுஷ்மா... மோடி அதிருப்தி?
டெல்லி: முன்னாள் ஐபிஎல் கமிஷனரும், ஊழல் புகாரில் சிக்கியதைத் தொடர்ந்து லண்டனுக்குத் தப்பி ஓடி அங்கேயே வசித்து வரும் லலித் மோடிக்கு, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உதவி செய்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்த விவகாரம் குறித்து தற்போது பிரதமர் நரேந்திர மோடி விசாரித்து வருவதாகவும், அவரிடம் சுஷ்மா விளக்கம் அளித்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
அதேசமயம், மனிதாபிமான அடிப்பையில்தான் தான் மோடிக்கு உதவி செய்ததாக சுஷ்மா டிவிட்டரில் விளக்கம் அளித்துள்ளார்.
கடந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின்போது, இந்தியாவில் தன் மீது தொடரப்பட்டுள்ள வழக்கை சந்திக்க முடியாமல் லண்டனுக்குப் போய் வசித்து வருகிறார் லலித் மோடி. அவருக்கு பாஜக தரப்பிலிருந்து ஆதரவு கிடைத்திருப்பதாக ஏற்கனவே கூறப்பட்டு வந்தது. இந்த நிலையில், வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் லலித் மோடிக்கு ஆதரவாக செயல்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

லலித் மோடியின் மனைவிக்கு போர்ச்சுகல் நாட்டில் வைத்து சிகிச்சை தரப்படவுள்ளதாம். இதற்காக இங்கிலாந்தை விட்டு வெளியேற விரும்புகிறார் லலித் மோடி. இதற்காக அவர் சுஷ்மாவின் உதவியை நாடியதாக தெரிகிறது. இதையடுத்து இங்கிலாந்து எம்.பி. கீத் வெய்ஸுடன் பேசிய சுஷ்மா, லலித் மோடி இங்கிலாந்தை விட்டு வெளியேற விரும்பினால் அதை இங்கிலாந்து அரசு தாராளமாக அனுமதிக்கலாம். அதற்கு இந்திய அரசு எதிர்ப்பு தெரிவிக்காது என்று கூறியுள்ளார்.
இந்த விவகாரம் வெளியாகி தற்போது சலசலப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து டிவிட்டரில் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார் சுஷ்மா. அதில், 2014ம் ஆண்டு ஜூலை மாதம் என்னிடம் பேசினார் லலித் மோடி. அப்போது தனது மனைவிக்கு புற்றுநோய் தொடர்பாக போர்ச்சுகல் நாட்டில் ஆகஸ்ட் 4ம் தேதியன்று அறுவைச் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகும், எனவே தான் அவருடன் இருக்க விரும்புவதாகவும், இதற்கு தனக்கு அனுமதி தேவை என்றும் வலியுறுத்தினார்.
இதையடுத்து அவருக்கு சுற்றுலா அனுமதியை வழங்க விதிமுறைப்படி இங்கிலாந்து அரசு நடவடிக்கை எடுக்கலாம் என்று நான் மனிதாபிமான அடிப்படையில் பரிந்துரைத்தேன் என்று கூறியுள்ளார் சுஷ்மா.
இந்த நிலையில் இந்த விவகாரம் பிரதமர் மோடி வரை போயுள்ளது. அவர் இதுகுறித்து சுஷ்மாவிடம் விளக்கம் கேட்டதாக தெரிகிறது. அதற்கு சுஷ்மா என்ன விளக்கம் கொடுத்தார் என்று தெரியவில்லை.
சுஷ்மா பதவி விலக காங். கோரிக்கை
இந்த நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் தலைவர் ஷகீல் அகமது கூறுகையில், சுஷ்மா மீதான புகார் உண்மையாக இருக்குமானால் அவர் உடனடியாக பதவி விலக வேண்டும். இந்த விவகாரத்தில் பிரதமர் தலையிட்டு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரினார்.
சச்சின் பைலட், திக்விஜய் சிங் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களும் இதே கோரிக்கையை வலியுறுத்தியுள்ளனர். சச்சின் பைலட் கூறுகையில், லலித் மோடி ஒரு பக்கா கிரிமினல். நாட்டை விட்டு தப்பி ஓடியவர். அவருக்கு வெளியுறவுத்துறை அமைச்சர் உதவுகிறார் என்பது மிகவும் அதிர்ச்சி தருவதாக உள்ளது என்று கூறியுள்ளார்.
ஆம் ஆத்ம், ஐக்கிய ஜனதாதளம் உள்பட பல்வேறு கட்சிகளும் கூட சுஷ்மாவுக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
ஐபிஎல் கமிஷனராக இருந்த லலித் மோடி மீது சீனிவாசன் பிசிசிஐ தலைவராக இருந்தபோது பெரும் ஊழல் புகார்களை சுமத்தி வழக்குப் பதிவு செய்யப்பட்டது. சென்னையில் அவர் மீது நிதி முறைகேடு தொடர்பாக வழக்கு உள்ளது. இதையடுத்து தப்பி ஓடி விட்டார் லலித் மோடி என்பது குறிப்பிடத்தக்கது.
-
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications