மம்தா ஆட்சிக்கு வந்தால் மே.வங்கம் காஷ்மீராக மாறும்-சுவேந்து அதிகாரி.. பதிலடி கொடுத்த உமர் அப்துல்லா!
கொல்கத்தா: திரிணாமுல் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், மேற்கு வங்கம் காஷ்மீராக மாறும் என்று பாஜகவின் சுவேந்து அதிகாரி கூறினார்.
ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்த பிறகு காஷ்மீர் சொர்க்கமாகிவிட்டது என்று பாஜகவினர் கூறுகின்றனர். எனவே மேற்கு வங்கம் காஷ்மீர் ஆனதில் என்ன தவறு இருக்கிறது? என்று அவருக்கு உமர் அப்துல்லா பதிலடி கொடுத்த்தார்.
மேற்கு வங்கத்தில் நண்பர்களாக இருந்து எதிரிகளாக மாறி இருக்கும் சுவேந்து-மம்தாவின் நேருக்கு நேரான கடும் போட்டியை பார்க்க மேற்கு வாங்க மக்கள் ஆயத்தமாகி விட்டனர்

உச்சக்கட்ட பரபரப்பில் மேற்கு வங்கம்
மேற்கு வங்க தேர்தல் உச்சக்கட்ட பரபரப்பில் சென்று கொண்டிருக்கிறது. அங்கு மம்தாவிடம் இருந்து ஆட்சியை கைப்பற்றி விட வேண்டும் என்பதில் அமித்ஷா உறுதியாக இருக்கிறார். இதற்காக அவர் போட்ட ஸ்கெட்ச் நன்கு ஒர்க்அவுட் ஆனது. மம்தாவின் வலது கரமாக செயல்பட்ட சுவேந்து அதிகாரி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் உள்பட பலரை லாகவமாக பாஜகவுக்கு தூக்கினார் அமித்ஷா. மேலும், அங்கு யாத்திரை, பொதுக்கூட்டம் என பிராமதப்படுத்தி வருமகிறது பாஜக. பிரதமர் முதல் ஜே.பி.நட்டா வரை மேற்கு வங்கத்தில் தொடர்ந்து வலம் வருகின்றனர்.

மம்தா-சுவேந்து அதிகாரி போட்டி
ஆனால் தான் எதற்கும் அஞ்சும் ஆள் இல்லை என்பதை மம்தா நிரூபித்தார். கிரிக்கெட் வீரர் மனோஜ் திவாரி மற்றும் சில பெங்காலி நடிகர்களை தன்பக்கம் இழுத்தார். முடிந்தால் நந்திகிராம் தொகுதியில் போட்டிங்கள் என்ற சுவேந்து அதிகாரியின் சவாலை ஏற்று நந்திகிராமில் நிற்பதாக அறிவித்தார் மம்தா. 291 தொகுதிக்கான வேட்பாளர் பட்டியலையும் அதிரடியாக வெளியிட்டார். பாஜகவும் அங்கு முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. நந்திகிராமில் சுவேந்து அதிகாரி நிற்பதாக அறிவித்தது.

காஷமீராக மாறும்
நண்பர்களாக இருந்து எதிரிகளாக மாறி இருக்கும் சுவேந்து-மம்தாவின் கடும் போட்டியை பார்க்க மேற்கு வாங்க மக்கள் ஆயத்தமாகி விட்டனர். இந்த நிலையில் பெஹலாவின் முச்சிபாராவில் நேற்று நடந்த பேரணியில் பேசிய சுவேந்து அதிகாரி, ஷியாமா பிரசாத் முகர்ஜி இல்லாதிருந்தால், இந்த நாடு ஒரு இஸ்லாமிய நாடாக இருந்திருக்கும், நாங்கள் பங்களாதேஷில் வாழ்ந்திருப்போம். திரிணாமுல் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், மேற்கு வங்கம் காஷ்மீராக மாறும் என்று கூறினார்.

முட்டாள்தனமான கருத்து
சுவேந்து அதிகாரியின் இந்த கருத்துக்கு ஜம்மு -காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா கடும் கண்டனம் தெரிவித்தார். ஆகஸ்ட் 2019-ல் ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்த பிறகு காஷ்மீர் சொர்க்கமாகிவிட்டது என்று பாஜகவினர் கூறுகின்றனர். எனவே மேற்கு வங்கம் காஷ்மீர் ஆனதில் என்ன தவறு இருக்கிறது? எப்படியிருந்தாலும், வங்காளிகள் காஷ்மீரை நேசிக்கிறார்கள் மற்றும் காஷ்மீரை அதிக எண்ணிக்கையில் பார்வையிடுகிறார்கள், எனவே உங்கள்(சுவேந்து அதிகாரி)முட்டாள்தனமான, சுவையற்ற கருத்தை நாங்கள் மன்னிக்கிறோம்.என்று டுவிட்டரில் தெரிவித்தார் உமர் அப்துல்லா.
-
"பொருளாதார சுனாமி.." ராகுல் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. சட்டென பாயிண்ட்டை பிடித்த பாஜக! மோதல் -
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
2047ல் இந்தியா வல்லரசு.. வாய்ப்பில்லை ராஜா! இன்னும் 34 வருஷமாகும்.. உண்மையை உடைத்த ஆய்வறிக்கை! -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா












Click it and Unblock the Notifications