காலை முதல் மாலை வரை நடந்த ஆண்மை சோதனை! சோர்ந்து போன நித்தியானந்தா!!
பெங்களூர்: பலாத்கார வழக்கில் சாமியார் நித்தியானந்தாவுக்கு காலை முதல் மாலை வரை ஆண்மை பரிசோதனை நடந்தது. ஆண்மை பரிசோதனை செய்து கொள்ள பெண் சிஷ்யர்கள் உள்ளிட்டோருடன் பெங்களூரிலுள்ள அரசு மருத்துவமனைக்கு நித்யானந்தா வந்திருந்தார்.
பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக நித்தியானந்தாவிடம் ஆண்மை பரிசோதனை நடத்த கர்நாடக சிஐடி போலீசார் முடிவு செய்திருந்தனர். தனக்கு குழந்தை போன்ற உடல்தான் இருப்பதாக நித்தியானந்தா கூறியிருந்ததால் ஆண்மை பரிசோதனை நடத்தி உண்மையை கண்டறிய முடிவு செய்யப்பட்டிருந்தது.

ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக ஐகோர்ட்டில் நித்தியானந்தா தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்த ஐகோர்ட், நித்தியானந்தாவுக்கு ஆகஸ்ட் 6ம்தேதி, ஆண்மை பரிசோதனை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. இந்த சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து, தடை கோரி, நித்தியானந்தா தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு போடப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றமும் நித்தியானந்தாவுக்கு செப்டம்பர் 8ம்தேதி ஆண்மை பரிசோதனை செய்ய உத்தரவிட்டது.
அதன்படி பெங்களூரிலுள்ள விக்டோரியா அரசு பொது மருத்துவமனையில் நித்தியானந்தாவுக்கு ஆண்மை பரிசோதனை 8ம்தேதி திங்கள்கிழமை, நடத்தப்பட்டது. பரிசோதனைக்கு உட்படுவதற்காக, சிஷ்யகோடிகளுடன், நித்தியானந்தா மருத்துவமனைக்கு வந்தார். பெண் சிஷ்யர்கள் வெள்ளை சேலையும், ஆண் சிஷ்யர்கள் காவி உடையும் அணிந்திருந்தனர். நித்தியானந்தாவும் காவி உடையுடனே மருத்துவமனைக்கு வந்திருந்தார்.
6 பேர் கொண்ட டாக்டர் குழு, நித்தியானந்தாவுக்கு ஆண்மை பரிசோதனை நடத்தியது. ஜெனரல் மருத்துவர், நியூராலஜி, உளவியல், தடயவியல் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற டாக்டர்கள் இதில் பங்கேற்றனர். விக்டோரியா மருத்துவமனை தலைவரான துர்க்கண்ணா இந்த சோதனையை மேற்பார்வையிட்டார்.
ஆண்மை சோதனை நடத்துவதற்காக, காலையில் எதுவும் சாப்பிடாமல் நித்தியானந்தா வந்திருந்தார். மருத்துவமனையில் மீடியாக்களும், போலீசாரும் குவிந்திருந்தனர். காலை 7.45 மணிக்கு மருத்துவமனைக்கு வந்த நித்தியானந்தாவுக்கு மாலை வரையில் தொடர்ந்து பல்வேறு சோதனைகள் நடத்தப்பட்டன.
விந்தணுவை பெறுவதற்காக நித்தியானந்தாவை சுய இன்பம் செய்யுமாறு டாக்டர்கள் வலியுறுத்தினர். முதலில் மறுத்த நித்தியானந்தா தன்னார்வ தொண்டு நிறுவன ஊழியர்கள் சிலரது சமரசத்தை தொடர்ந்து அதற்கு சம்மதித்து, தனது விந்தணுவை டாக்டர்களிடம் அளித்தார்.
தொடர் சோதனைகளால் சோர்வுற்ற நித்தியானந்தாவுக்கு சிஷ்யர்கள் பழம், பழ ஜூஸ் கொடுத்து உபசரித்தனர். அவர் மூச்சு விட சிரமப்பட்டதால் சற்று ஓய்வளித்து டாக்டர்கள் முதலுதவி செய்தனர்.
இதன்பிறகு மடிவாளா பகுதியிலுள்ள தடயவியல் ஆய்வு கூடத்துக்கு நித்தியானந்தா அழைத்துச் செல்லப்பட்டார். இதற்காக சக்கர நாற்காலியில் வைத்து அழைத்துவந்து ஆம்புலன்சில் நித்தியானந்தா ஏற்றிச் செல்லப்பட்டார்.
தடயவியல் ஆய்வு மையத்தில் அவரது குரல் சோதித்து பார்க்கப்பட்டது. நித்தியானந்தாவுக்கு ஆண் குரலா அல்லது பெண் குரலா என்பதை கண்டறிவதுடன், போனில் நித்தியானந்தா மிரட்டியதாக போலீசில் பதிவு செய்யப்பட்டுள்ள ஒரு வழக்கின் ஆதாரத்துக்காகவும் இந்த குரல் சோதனை செய்யப்பட்டதாக சிஐடி போலீசார் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications