Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

1 ரூபாய் தர்றோம்.. ஆர்சிபியை கொடுத்துட்டு ஓடிருங்க. .மல்லையாவிடம் பேரம் நடந்ததாக சாமி பரபர தகவல்

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    ஆர்.சி.பி. அணியை ஒரு ரூபாய்க்கு பேரம் பேசியதாக சு.சாமி பரபரப்பு தகவல்- வீடியோ

    டெல்லி: 1 ரூபாய் தருகிறோம். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை கொடுத்து விடுங்கள் என சிலர் விஜய் மல்லையாவிடம் பேரம் பேசியதாக தகவல் கிடைத்துள்ளது என்று பாஜகவைச் சேர்ந்த சுப்பிரமணியம் சாமி கூறியுள்ளார்.

    Swamy says Vijay Mallya offered a bargain like Spice Jet

    பல ஆயிரம் கோடி வங்கிப் பணத்தை மோசடி செய்து விட்டு நாட்டை விட்டு ஓடி விட்ட விஜய் மல்லையா விவகாரம் மீண்டும் சூடு பிடித்துள்ளது. நாட்டை விட்டு ஓடுவதற்கு முன்பு அவர் நிதியமைச்சர் அருண் ஜேட்லியை சந்தித்துள்ளார். அவரிடம் பேசி விட்டுத்தான் அவர் நாட்டை விட்டு போயிருக்கிறார் என்பதை மக்களை அதிர வைத்துள்ளது.

    பாஜகவின் சுயரூபம் இதன் மூலம் அம்பலப்பட்டிருப்பதாக எதிர்க்கட்சிகள் கட்டி ஏறிக் கொண்டுள்ளன. இந்த நிலையில் சுப்பிரமணியம் சாமி ஒரு புதிய குண்டைப் போட்டுள்ளார். இன்று அவர் போட்டுள்ள ஒரு டிவீட்டில், எனக்குத் கிடைத்த தகவலின்படி, விஜய் மல்லையாவிடம் அவரது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஐபிஎல் அணியை 1 ரூபாய்க்குத் தருமாறு பேரம் பேசியுள்ளனர். பேரம் பேசியது யார் என்ற விவரம் கிடைக்கவில்லை. அதை தற்போது ஆய்ந்து கொண்டிருக்கிறேன் என்று கூறியுள்ளார் சாமி.

    ஜெட் ஏர்வேஸ் நிறுவன பேரம் போல இது நடந்திருப்பதாகவும் சாமி கூறியிருக்கிறார். இதனால் மேலும் பரபரப்பு கூடியுள்ளது. மல்லையிடம் 1 ருபாய்க்கு ஆர்சிபி அணியை பேரம் பேசியது யார் என்ற பரபரப்பு கூடியுள்ளது. விரைவில் சாமியே இதுகுறித்த விவரத்தை வெளியிடலாம் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. அதேசமயம், நிச்சயம் இது பாஜக தரப்பைச் சேர்ந்த யாராவது முக்கியஸ்தராக இருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

    Swamy says Vijay Mallya offered a bargain like Spice Jet

    முன்னொரு காலத்தில் சாமியின் ஜனதாக் கட்சியில் செயல் தலைவராக இருந்தவர் மல்லையா. அந்தப் பொறுப்பில் இருந்து கொண்டே தேவெ கெளடாவின் மதச்சார்பற்ற ஜனதாதளம் சார்பில் ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட முயன்றார் அவர். இதனால் கடுப்பான சாமி, மல்லையாவை கட்சியை விட்டு நீக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+