ரிசர்வ் வங்கி ஆளுநர் பதவியில் இருந்து ரகுராம் ராஜனை உடனே டிஸ்மிஸ் செய்ய மோடிக்கு சு.சுவாமி கடிதம்
டெல்லி: இந்தியராக தம்மை கருதாத, இந்திய பொருளாதார நலன்களுக்கு எதிராக செயல்படும் ரிசர்வ் வங்கி ஆளுநரான ரகுராம் ராஜனை அப்பதவியில் இருந்து டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு பாஜக ராஜ்யசபா எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி கடிதம் அனுப்பியுள்ளார்.
மத்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜனுக்கு எதிராக தொடர்ந்து போர்க்கொடி தூக்கி வருகிறார் சுப்பிரமணியன் சுவாமி. அண்மையில் இந்தியாவில் லஞ்சம், ஊழல் தான் எல்லா வளர்ச்சியையும் பாதிக்கிறது. லஞ்சம் தருவதை மக்களே வெறுக்க ஆரம்பித்து விட்டனர் என்று லண்டனில் நடைபெற்ற கருத்தரங்கம் ஒன்றில் ரகுராம் ராஜன் பேசியிருந்தார்.

டிஸ்மிஸ் செய்ய கோரிக்கை
இதற்கு சுப்பிரமணியன் சுவாமி கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். ரகுராம் ராஜனை ரிசர்வ் வங்கி ஆளுநர் பதவியில் இருந்தே நீக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியிருந்தார்.

சிகாகோவுக்கு அனுப்புக
அத்துடன், ரிசர்வ் வங்கியின் ஆளுநர் பதவிக்கு ரகுராம் ராஜன் பொருத்தமானவர் அல்ல என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்தாகும். பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதாகக் கூறி, வட்டிவிகிதத்தை உயர்த்திவிட்டார். இதனால், தொழில்கள் பாதிக்கப்பட்டு நாட்டில் வேலைவாய்ப்பின்மை அதிகரித்துவிட்டது. ரகுராம் ராஜனை சிகாகோ நகருக்கே விரைவில் திருப்பி அனுப்புவது நல்லது என்று கருதுகிறேன் எனக் கூறியிருந்தார். சிகாகோ பல்கலைக்கழகத்தில் ரகுராம் ராஜன் பேராசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மோடிக்கு கடிதம்
இந்த நிலையில் பிரதமர் மோடிக்கு சுப்பிரமணியன் சுவாமி கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார். அதில், ரகுராம் ராஜன் தம்மை முழுமையான ஒரு இந்தியராக கருதவே இல்லை. இந்திய பொருளாதாரத்தை திட்டமிட்டு அவர் சீர்குலைத்து வருகிறார். இந்தியாவின் ரிசர்வ் வங்கி ஆளுநராக இருந்து கொண்டே அமெரிக்காவின் கிரீன் கார்டை அவர் புதுப்பித்திருக்கிறார்.

நிறையபேர் வெயிட்டிங்...
முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசால் நியமிக்கப்பட்ட ஒருவர் இந்திய பொருளாதார நலன்களுக்கு எதிராக செயல்பட்டுக் கொண்டிருப்பதை என்னால் வேடிக்கை பார்க்க முடியாது. ரிசர்வ் வங்கி ஆளுநர் பதவிக்கு ரகுராம்ராஜனை விட பொருத்தமான நாட்டின் வளர்ச்சியில் பொருளாதார நலனில் அக்கறை கொண்ட பலரும் இருக்கிறார். ஆகையால் ரகுராம்ராஜனை அப்பதவியில் இருந்து உடனே நீக்க வேண்டும் என வலியுறுத்தியிருக்கிறார் சுப்பிரமணியன் சுவாமி.
-
ஆயிரம் பாதுகாப்பு கொடுத்தாலும்.. 'இது' மட்டும் குறையவேயில்லை.. RBI வெளியிட்ட பகீர் ரிப்போர்ட்! -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
ஜூன் மாதம் பொறந்தாச்சு.. ஆர்பிஐ சொல்லப்போகும் முடிவு.. வீட்டுக் கடன், வாகன கடன் வாங்கியவர்கள் உஷார்! -
RBI-யின் 'கில் ஸ்விட்ச்'.. ஆன்லைன் மோசடியிலிருந்து உங்கள் பணத்தை.. ஒரே நொடியில் காப்பாற்றும் சக்தி -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications