65/23 .. நந்தினி அப்படி சொன்னதுமே.. மாப்பிள்ளைக்கு கையும் ஓடல, காலும் ஓடல.. இப்படி ஒரு விசித்திரம்
65 வயது தாத்தாவை 23 வயது இளம்பெண் மனப்பூர்வமாக விரும்பி திருமணம் செய்து கொண்டுள்ளார்
கான்பூர்: இணையத்தில் ஒரு வீடியோ டிரெண்டாகி வருகிறது.. அது ஒரு திருமண நிகழ்வு.. அதை பார்த்ததுமே இணையவாசிகள் திரண்டு சென்று மணமக்களுக்கு வாழ்த்துக்களை சொல்லி வருகிறார்கள்.
காதல் எல்லா காலகட்டங்களிலும் புதிதாகவே பிறந்து கொண்டிருக்கிறது.. காதலுக்கு கண்ணில்லை.. வயதுமில்லை.. அழகுமில்லை.. என்றெல்லாம் காலம் காலமாக சொல்லப்பட்டு வருபவைதான்...
ஆனாலும், 50 வயதுக்கு மேல், வயது வித்தியாசம் இருப்பவரை திருமணம் செய்து கொண்டு மிச்சமிருக்கும் வாழ்நாளை அவருடன் வாழ விரும்புவது அபூர்வமான விஷயம்.

யூஸர்ஸ்
சமீபத்தில் ஒரு விநோத சம்பவம் நடந்தது. அமெரிக்காவின் மிஸிஸிப்பியின் ஸ்டார்வில்லேவை சேர்ந்தவர் அவர்.. 24 வயதாகிறது. அந்த பெண்ணின் பெயர் மிராக்கிள் போக்.. இவர் கடந்த 2019ம் ஆண்டு, ஒரு சலவைக் கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது சார்லஸ் என்பவரை மிராக்கிள் சந்தித்தார்.. சார்லஸுக்கு 85 வயதாகிறது.. ஆரம்பத்தில் இருவரும் நட்பாக பழகத் தொடங்கியுள்ளனர்... இருவருக்கும் 61 வயது வித்தியாசம்.. அதாவது மிராக்கிளின் தாத்தாவைவிட, சார்லஸ் 10 வயது மூத்தவராம்.. 2020ம் ஆண்டு, தன்னுடைய காதலை சார்லஸ் மிராக்கிளிடம் சொல்லி உள்ளார்.. மிராக்கிளும் உடனே இதற்கு ஓகே சொல்லியதையடுத்து, திருமணம் ஜெகஜோதியாக நடந்து முடிந்தது.

6 பெண்கள்
இப்போது, இதுபோலவே ஒரு ஆச்சரிய சம்பவம் நடந்தள்ளது.. அதுவும் நம்ம இந்தியாவிலேயே நடந்துள்ளது.. உத்தரப்பிரதேச மாநிலத்தின் பாராபங்கி மாவட்டத்தில் ஹூசைனாபாத் என்ற பகுதி உள்ளது.. இங்கு வசித்து வருபவர் நக்கத் யாதவ். இவருக்கு 65 வயதாகிறது.. மொத்தம் 6 பெண் குழந்தைகள் இருக்கிறார்கள்.. இந்த 6 பெண்களுக்கும் திருமணம் செய்து தனது கடமைகளை முடித்து விட்டார் நக்கத் யாதவ். அவரவரும் தனித்தனியாக மாமியார் வீடுகளில் குடும்பம் நடத்தி வருகிறார்கள்.

தனிமை வாட்டியது
இந்நிலையில், நக்கத் யாதவின் மனைவி சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார்.. மனைவியின் பிரிவை அவரால் தாங்கி கொள்ளவே முடியவில்லை.. தனிமையையும் கடத்த முடியவில்லை.. அதனால், தனக்கு ஒரு வாழ்க்கை துணை வேண்டும் என்று முடிவெடுத்தார்.. இதற்காக, ஒரு பெண்ணை தேடி வந்தபோதுதான், இவரை திருமணம் செய்து கொள்ள ஒரு பெண் முன்வந்தார்.. அவருக்கு 23 வயதுதான்.. அதாவது நக்கத்தைவிட, 42 வயது குறைவானவர் ஆவார்.. அந்த பெண்ணின் பெயர் நந்தினி.. இந்த விஷயத்தை, தன்னுடைய 6 மகள்களிடமும் கலந்து பேசினார் நக்கத்,

டிஜே மியூசிக்
6 பெண்களுமே, தன் தந்தையின் திருமணத்துக்கு சம்மதம் சொன்னார்கள்.. 2 வீட்டாரின் முழு சம்மதத்துடன் அயோத்தி மாவட்டத்தில் உள்ள கமகாயா தேவி கோயிலில் திருமணம் சிறப்பாக நடந்தது.. 23 வயது நந்தினிக்கு 65 வயதான நக்கத் தாலி கட்டினார்.. உறவினர்கள் மணமக்களை திரண்டு வந்து வாழ்த்தினர்.. இதில் ஹைலைட் என்னவென்றால், கல்யாணத்திற்கு "டிஜே" மியூசிக் எல்லாம் ஏற்பாடு செய்தார்களாம்.. டான்ஸ் புரோகிராம் வேற நடந்துள்ளது.. இந்த இந்த திருமண வீடியோதான் இணையத்தில் டிரெண்டாகி கொண்டிருக்கிறது..

ஹேப்பி தருணம்
மாப்பிள்ளை நக்கத், இதை பற்றி சொல்லும்போது, "என்னுடைய 6 மகள்களுக்கும் கல்யாணம் செய்து வைத்துவிட்டேன். அவர்கள் கணவர்கள் குழந்தைகளுடன் சந்தோஷமாக அவரவர் வீட்டில் வாழ்ந்து வருகிறார்கள்.. அவர்கள் சம்மதத்தை பெற்று தான் இந்த கல்யாணத்தையே செய்து கொள்கிறேன்... மனைவியின் மறைவு என்னை தனிமையில் தள்ளியதால் அதில் இருந்து மீளவே இந்த திருமணத்தை செய்து கொள்கிறேன்.. நந்தினி இந்த திருமணத்திற்கு சம்மதம் சொன்னது எனக்கு ஆச்சரியம்.. ரொம்ப மகிழ்ச்சிதான்.. வயது வித்தியாசம் எங்களுக்கு ஒரு பொருட்டே இல்லை" என்றார் பூரிப்புடன்.
-
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்?












Click it and Unblock the Notifications