திருமண வரவேற்பில் ஸ்வைப் மெஷினுடன் மணமக்கள்: வைரல் போட்டோ !

திருமண விழாவில் மணமக்கள் ஸ்வைப் மெஷினுடன் அமர்ந்திருப்பது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது

Subscribe to Oneindia Tamil

டெல்லி: திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் ஸ்வைப் மெஷினுடன் மணமக்கள் அமர்ந்திருப்பது போன்ற புகைப்படம் இண்டெர் நெட்டில் வைரலாக பரவி வருகிறது.

பிரதமர் மோடி கடந்த 8-ம் தேதி இரவு ரூ.500 மற்றும் 1,000 நோட்டுகள் செல்லாது என்ற அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். யாரும் எதிர்பார்க்காத இந்த அறிவிப்பு நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதனால் சாதாரண பொதுமக்கள், சிறு வணிகர்கள், கடைக்காரர்கள், உணவகங்களை நடத்துவோர், காய்கறி வியாபாரிகள், பூ வியாபாரிகள் என பலரும் பெரிய அளவில் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து நாடு முழுவதும் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டது.

 Swipe machines in Marriage functions

பொதுமக்கள் தங்களின் அன்றாட தேவைக்காக பணமெடுக்க வங்கிகளில் நீண்ட வரிசையில் காத்திருந்து பணம் எடுத்து செல்கின்றனர். திருமண வீட்டாருக்கு வங்கிகளில் இருந்து பணம் எடுக்க சில சலுகைகள் அளிக்கப்பட்டிருந்தாலும். இந்த அறிவிப்பால் திருமணம் செய்வோர் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

இந்த பணம் போதுமானதாக இல்லை எனவும் அவர்கள் கூறுகின்றனர். பணப்புழக்கம் குறைவாக இருந்தாலும் திருமண நிகழ்வுகளில் உறவினர்கள் பரிசுப்பொருட்களும், மொய்ப்பணமும் வைப்பது வழக்கம். தற்போது நிலவி வரும் பணத் தட்டுப்பாட்டால்ல திருமண நிகழ்ச்சியில் ஸ்வைப் மெஷின் மூலம் மொய் பணத்தை வசூல் செய்யும் நிகழ்ச்சியும் நடந்து வருகிறது.

இந்நிலையில் வடமாநிலம் ஒன்றில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில், புதுமண தம்பதியினர் ஸ்வைப் மெஷினுடன் வரவேற்பில் அமர்ந்திருக்கும் புகைப்படம் ஒன்று, இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இதனை கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+