இந்திய கருப்பு பண முதலைகள் இனி சுவிஸ் வங்கியில் டெபாசிட் செய்ய முடியாது.. போட்டாச்சு புது ஒப்பந்தம்
டெல்லி: இந்திய கருப்பு பண முதலைகளுக்கு இனிமேல் சுவிஸ் வங்கி சொர்க்கபுரியாக இருக்காது. அதற்கு ஏற்ற ஒப்பந்தத்தை இந்திய அரசு கையெழுத்திட்டுள்ளது.
இந்தியாவிலுள்ள பெரும்பாலான கருப்பு பண முதலைகளை சுவிட்சர்லாந்தில் உள்ள வங்கிகளில் பணத்தை டெபாசிட் செய்து குவித்து வைத்துள்ளனர். அந்த நாட்டு விதிமுறைப்படி, அவர்களின் தகவல்கள் வெளியே தரப்படமாட்டாது என்பது இதற்கு காரணம்.

இந்த பிரச்சினையை தீர்க்க மத்திய அரசு தொடர் முயற்சிகளை எடுத்து வந்தது. அதன் ஒருபகுதியாக இந்தியா-சுவிட்சர்லாந்து நடுவே 'Joint Declaration' for implementation of Automatic Exchange of Information (AEOI) என்ற பெயரில் இன்று ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்த ஒப்பந்தப்படி, 2018ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் சுவிஸ் வங்கியிலுள்ள இந்தியர்களின் அக்கவுண்ட் விவரங்களை இந்தியா ஆட்டோமெட்டிக்காக தெரிந்து கொள்ள முடியும். முதல் தகவல் 2019ம் ஆண்டு செப்டம்பரில் வெளியாகும்.
இந்த உடன்படிக்கை, கருப்பு பண ஒழிப்பிற்கு ஒரு முக்கிய பங்களிப்பு என நிதித்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது. அதேநேரம், 2018 செப்டம்பர் மாதத்திற்கு முன்பாக சுவிஸ் வங்கிகளிலிருந்து பணத்தை ஷிப்ட் செய்யும் முதலைகள் குறித்த விவரம் இந்தியாவுக்கு கிடைக்காது என்றே தெரிகிறது. அதுகுறித்த ஷரத்து தெளிவாக வரையறுக்கப்படவில்லை.
ஆனால், சுவிஸ் வங்கிகளில் இனிமேலும் கருப்பு பண முதலைகள் பணத்தை டெபாசிட் செய்ய முடியாமல் போகச் செய்ய இந்த ஒப்பந்தம் உதவும். கருப்பு பண முதலைகள் வேறு நாடுகளின் வங்கிகளை தேடி அலைய வேண்டிவரலாம். பல நாடுகளும், இந்தியாவுடன் தங்களது வங்கி கணக்கு தகவல்களை பரிமாற தயாராக இருப்பதால், கருப்பு பணத்தை எங்கு பதுக்குவது என்ற சிக்கல் பெரு முதலைகளுக்கு எழலாம் என எதிர்பார்க்கிறது மத்திய அரசு.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications