இனிதாக நடந்து முடிந்தது ஸ்ரீசாந்த்-புவனேஸ்வரி திருமணம்...
பாலக்காடு: கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்துக்கும், அவரது காதலியும் ஜெய்ப்பூர் ராஜ குடும்பத்தைச் சேர்ந்த புவனேஸ்வரிக்கும் குருவாயூர் கோவிலில் திருமணம் இனிதாக நடந்து முடிந்தது.
சூதாட்ட புகாரில் சிக்கிய கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்துக்கு கிரிக்கெட் விளையாட வாழ்நாள் தடை விதிக்கப் பட்டுள்ளது. இந்நிலையில், ஸ்ரீசாந்த் தனது காதலி புவனேஷ்வரி குமாரியை இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டுள்ளார்.
இவர்களது திருமணத்திற்கு குஜராத் முதல்வரும், பாரதீய ஜனதாக் கட்சியின் பிரதம வேட்பாளருமான நரேந்திர மோடி வருவார் என வதந்திகள் நிலவியது குறிப்பிடத்தக்கது.

கிரிக்கெட் சூதாட்டம்...
இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சாளரான கேரள மாநிலத்தைச் சேர்ந்த 30 வயது ஸ்ரீசாந்த், ஆறாவது பிரிமியர் தொடரில் விளையாடிய போது சூதாட்டத்தில் ஈடுபட்டது கண்டு பிடிக்கப் பட்டது.

வாழ்நாள் தடை...
அதனைத் தொடர்ந்து அவருக்கு, கிரிக்கெட் விளையாட வாழ்நாள் தடை விதித்து உத்தரவிட்டது இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,).

திருமணம்...
இந்நிலையில் ஜாமீனில் வெளி வந்துள்ள ஸ்ரீசாந்த்துக்கும், ஜெய்ப்பூர் , திவான்புர ராஜகுடும்பத்தை சேர்ந்தவரும், தங்கநகை பேஷன் டிசைனருமான, புவனேஸ்வரி குமாரி ஷெகாவத்துக்கும், திருச்சூர் அருகிலுள்ள குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் நேற்று காலை, 7:40 மணிக்கு திருமணம் நடந்தது.

வரவேற்பு...
அதனைத் தொடர்ந்து, அவர்களது திருமண வரவேற்பு நிகழ்ச்சி, கொச்சி லீ மெரிடியன் ஓட்டலில் நடைபெற்றது.

காதல் பூத்தது....
கடந்த, 2006ல், ஜெய்ப்பூரில் நடந்த கிரிக்கெட் போட்டியில் விளையாட சென்ற போது, ஸ்ரீ சாந்தும், புவனேஸ்வரி குமாரிக்கும் காதல் ஏற்பட்டது. தொடர்ந்து ஏழு ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

2வது வீரர்...
27 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 87 விக்கெட்களையும், 53 ஒரு நாள் போட்டிகளில் ஆடி 75 விக்கெட்களையும், 10 டுவென்டி 20 போட்டிகளில் ஆடி 7 விக்கெட்களையும் ஸ்ரீசாந்த் வீழ்த்தியுள்ளார். இந்திய அணிக்காக ஆடிய 2வது கேரள வீரர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
Kerala: கேரளா காருண்யா லாட்டரி டிக்கெட்.. ரூ.1 கோடியை தட்டி தூக்கிய பாலக்காடு அதிர்ஷ்டசாலி! -
குஷ்பு மாப்பிள்ளை இவரா? அந்த போட்டோவை எடுத்து போட்டு அலப்பறை! ஜெ.தீபா கணவர் மாதவன் வரை போய்ட்டாங்களே -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications