டிவிட்டரில் இணைந்தது ‘காதல் சின்னமான’ தாஜ்மஹால்
ஆக்ரா: உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹாலுக்கு டிவிட்டரில் புதிய அக்கவுண்ட் துவங்கப் பட்டுள்ளது.
காதலின் சின்னமாகவும், உலக அதிசயங்களில் ஒன்றாகவும் திகழ்கிறது ஆக்ராவில் உள்ள தாஜ்மஹால். இந்தியாவை ஆண்ட முகலாய மன்னர்களில் ஒருவரான ஷாஜகான், தனது காதல் மனைவிக்காக கட்டிய நினைவுச் சின்னம் தான் இது.
ஆக்ராவில் யமுனை நதிக்கரையில் அமைந்துள்ள இந்த பளிங்கு மாளிகையை உலகம் முழுவதிலும் இருந்து சுற்றுலாப் பயணிகள் வந்து பார்த்துச் செல்கின்றனர்.

டிவிட்டர் பக்கம்...
இந்நிலையில், தாஜ்மஹாலுக்கான அதிகாரப்பூர்வ டிவிட்டர் அக்கவுண்ட் தற்போது துவங்கப் பட்டுள்ளது. உத்திரப்பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் சுதந்திர தினமான நேற்று இந்த கணக்கைத் துவக்கி வைத்தார்.

என் தாஜ் நினைவு...
மேலும், அந்தப் பக்கத்தில் தனது குடும்பத்துடன் தாஜ்மஹால் முன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் அவர் பதிவு செய்தார். ‘என் தாஜ் நினைவு' என்ற பெயரில் இந்தப் புகைப்படத்தை அவர் பகிர்ந்து கொண்டார்.

முதல் நினைவுச் சின்னம்...
இதன் மூலம் டிவிட்டரில் கணக்கு வைத்துள்ள உலகின் முதலாவது நினைவுச் சின்னம் என்ற பெருமையை தாஜ் மஹால் பெற்றுள்ளது. தாஜ் மஹாலை நேரில் கண்டு களிக்காதவர்கள் இனி டிவிட்டர் தளத்தில் அதனை பின்தொடரலாம்.

புகைப்படங்கள்...
கணக்கு துவங்கப்பட்ட ஒரு நாளிலேயே எட்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் தாஜ்மஹாலைப் பின் தொடர ஆரம்பித்துள்ளனர். மேலும், தாங்கள் தாஜ்மஹால் முன்பு எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் மக்கள் இந்தப் பக்கத்தில் பகிர்ந்து வருகின்றனர்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications