சுற்றுலா தலப் பட்டியலில் இருந்து தாஜ்மஹால் நீக்கம்.. உ.பி அரசு அதிரடி
உத்தரப்பிரதேச அரசு வெளியிட்டுள்ள சுற்றுலாப் பட்டியலில் தாஜ்மஹால் நீக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லக்னோ: உத்தரப்பிரதேச அரசு வெளியிட்டுள்ள சுற்றுலாப் பட்டியலில் தாஜ்மஹால் நீக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முதல்வர் யோகிய ஆதித்யநாத் தலைமையிலான அரசு உத்தரப்பிரதேசத்தின் சுற்றுலாத் தலங்களுக்கான புதிய பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் உலகப் புகழ்வாய்ந்த தாஜ்மஹால் இடம்பெறவில்லை.

அதேநேரத்தில் உத்திரப்பிரதேச அரசின் புதிய சுற்றுலா மையங்களின் பட்டியலில் காசி நகரத்திற்கு முதலிடம் அளிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணரின் பிறப்பிடமான மதுராவுக்கு இரண்டாவது இடம் அளிக்கப்பட்டுள்ளது. உத்திரப்பிரதேச முதல்வர் ஆதித்யநாத்தின் கோரக்பூர் மடத்திற்கு நான்காவது இடம் அளிக்கப்பட்டுள்ளது.
மொகலாய மன்னர் ஷாஜகான் அவரது மனைவி மும்தாஜின் நினைவாகவும் தங்களின் காதலின் சின்னமாகவும் தாஜ்மஹாலை கட்டினார். புகழ்ப்பெற்ற சுற்றுலாத் தலங்களில் ஒன்றான தாஜ்மஹாலுக்கு ஆண்டுதோறும் 20 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.
உலக அதிசயங்களில் ஒன்றான இந்த தாஜ்மஹால் முழுவதும் வெள்ளை சலவைக்கல்லால் கட்டப்பட்டது. காதலின் சின்னமாகும் கருதப்படுகிறது தாஜ்மஹால்.
தாஜ்மஹால் இந்திய கலாச்சாரத்தை பின்பற்றி கட்டப்படாததால் பட்டியலில் சேர்க்கப்படவில்லை என உத்தரப்பிரதேச அரசு விளக்கம் அளித்துள்ளது. அரசின் சுற்றுலாத் தலங்கள் பட்டியலில் தாஜ்மஹால் நீக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications