ரூ.41,000 வாங்கிக் கொண்டு பலாத்காரம் செய்யப்பட்டதை மறந்துவிடு: பெண்ணை அதிர வைத்த பீகார் பஞ்சாயத்து!
பாட்னா: ரூ.41 ஆயிரத்தை வாங்கிக் கொண்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதை மறந்துவிடுமாறு பீகார் பஞ்சாயத்து மகாதலித் சமூகத்தைச் சேர்ந்த பெண்ணிடம் தெரிவித்துள்ளது.
பீகார் மாநிலம் கதிஹார் மாவட்டத்தில் உள்ள கோதா கிராமத்தைச் சேர்ந்த பிரகாஷ் ரவிதாஸ், நரேஷ் ரவிதாஸ் ஆகியோர் அதே கிராமத்தைச் சேர்ந்த திருமணமான மகாதலித் சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை இந்திரா ஆவாஸ் யோஜகனா திட்டம் குறித்த ஆவணங்களை தயார் செய்ய பஞ்சாயத்து அலுவலகத்திற்கு வருமாறு கடந்த மாதம் கூறியுள்ளனர். இதையடுத்து பஞ்சாயத்து அலுவலகத்திற்கு வந்த அந்த பெண்ணை பிரகாஷ் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதையடுத்து பஞ்சாயத்து கூட்டப்பட்டது. பஞ்சாயத்தார் கூடி பிரகாஷை அந்த பெண்ணுக்கு ரூ.41 ஆயிரம் ரொக்கம் அளிக்குமாறு உத்தரவிட்டனர். பணத்தை பெற்றுக் கொண்டு பலாத்கார சம்பவம் பற்றி போலீசில் புகார் அளிக்கக் கூடாது என்று அந்த பெண்ணுக்கு உத்தரவிட்டனர். ஆனால் பிரகாஷ் பணம் கொடுக்க மறுத்தார். இதை எதிர்த்து கேட்ட பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் மீது தீ வைத்தார் பிரகாஷ். இதில் அந்த பெண்ணின் கணவர் படுகாயம் அடைந்தார்.
இந்த சம்பவத்தை அடுத்து அந்த பெண் நரேஷ் மற்றும் பிரகாஷ் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவரது புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் நரேஷை கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள பிரகாஷை தேடி வருகின்றனர்.
முன்னதாக கிஷன்கஞ்ச் மாவட்டத்தில் 4 சகோதரர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு 7 மாதம் கர்ப்பமான சிறுமியை ரூ.50 ஆயிரம் பெற்றுக்கொண்டு கருவை கலைக்க பஞ்சாயத்து உத்தரவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications