ஓடிவந்து தாங்கும் அமெரிக்கா.."ஆப்கன் மக்களுக்கு நாங்க இருக்கோம்".. நிவாரண உதவி வழங்குவதாக அறிவிப்பு

ஆப்கன் மக்களுக்கு அமெரிக்கா உதவ முன்வந்துள்ளது

Subscribe to Oneindia Tamil

காபூல்: நாளுக்கு நாள் ஆப்கன் மக்களின் நிலைமை மோசமாக சென்று கொண்டிருக்கும் நிலையில், அமெரிக்கா நிவாரண உதவி வழங்க முன்வந்துள்ளது.

20 வருடம் கழித்து ஆட்சியை தாலிபன்கள் பிடித்தாலும், இப்போது அந்த நாடே வறுமையிலும் பட்டினியிலும் சிக்கி கொண்டுள்ளது..

மக்கள் வேலையில்லாமலும், உணவு இல்லாமலும் அவதிப்பட்டு வருகின்றனர். அரசு ஊழியர்களுக்கு இன்னும் சம்பளம் தரவில்லை.. கடுமையான நிதி நெருக்கடிக்கு அந்த நாடு ஆளாகி உள்ளது..

 ஆப்கானிஸ்தான்

ஆப்கானிஸ்தான்

மேற்கத்திய நாடுகளும் ஆப்கானிஸ்தானுக்கான உதவியை நிறுத்திவிட்டது.. உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியமும் பணம் செலுத்துவதை நிறுத்தி விட்டன.. இதனால், நிதி நிலைமை மோசமாகிவிட்டது.. வீட்டில் உள்ள பொருட்களை தெருவில் கொட்டி விற்று சாப்பிடும் நிலைமைக்கு மக்கள் ஆளாகி உள்ளனர்.. ஹெராட், பட்கிஸ் போன்ற பகுதிகளில் உணவுக்கு வழியில்லாமல் பெற்றோர் தங்களது இளம் மகள்களை திருமணத்துக்காக விற்பனை செய்ய வேண்டிய அவல நிலைக்கும் ஆளாகி உள்ளனர்..

பாதிப்பு

பாதிப்பு

இதனிடையே 2 நாளைக்கு முன்பு ஐநா ஒரு தகவலை கூறியிருந்தது.. அதன்படி, "ஆப்கானிஸ்தானின் 39 மில்லியன் மக்களில் பாதிக்கு மேல் 22.8 மில்லியன் மக்கள் கடுமையான உணவு பாதுகாப்பின்மை மற்றும் பட்டினியை நோக்கி சென்றுகொண்டிருக்கின்றனர்.. பொருளாதாரம் அதை விட வேகமாக வீழ்ச்சி அடைந்துள்ளது.. குழந்தைகள் உயிரிழக்க போகிறார்கள்... மக்கள் பட்டினி கிடக்கிறார்கள்... நிலைமை ரொம்ப மோசமாக போகிறது.. மனிதாபிமான செயல்களுக்கான நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும்" என்று எச்சரித்திருந்தது.

Recommended Video

    T20 World Cup தொடரில் விளையாடும் Afghanistan வீரர்களுக்கு Taliban போட்ட புது உத்தரவு
     அமெரிக்கா

    அமெரிக்கா

    இந்நிலையில், ஆப்கனுக்கு சர்வதேச உதவிகள் வந்துள்ளது... உணவு, ஆடை போன்றவற்றை விநியோகிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன.. அனைத்து நாடுகளும் ஆப்கானிஸ்தானுக்கு உதவ வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்த நிலையில், ரஷ்யா சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட சில நாடுகள் ஆப்கானிஸ்தான் அரசுக்கு உதவி செய்ய முன் வந்துள்ளன. ஆனால், அமெரிக்கா மட்டும் வாய் திறக்காமல் இருந்தது.. அமெரிக்காவும் தங்களுக்கு உதவ முன் வர வேண்டும் என்று தலிபான்கள் வேண்டுகோள் விடுத்தனர். ஆனால் அமெரிக்கா இதை காதிலேயே போட்டுக் கொள்ளவில்லை.

    அறிவிப்பு

    அறிவிப்பு

    இப்படிப்பட்ட சூழலில்தான், ஆப்கானிஸ்தான் மக்களுக்காக மனிதாபிமான அடிப்படையில் ரூ. 1076.85 கோடி உதவி செய்வதாக அமெரிக்கா அதிரடியாக அறிவித்துள்ளது. இது சம்பந்தமாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் டோனி பிளிங்கன் சொல்லும்போது, "பாதிக்கப்பட்டுள்ள ஆப்கன் மக்களுக்கு உதவி செய்ய அறிவித்துள்ளோம்.. ஆனால், இந்த உதவியை நேரடியாக போய் நாங்களே தர மாட்டோம்.. சர்வதேச சேவை அமைப்புகளிடம் இந்த பணம் ஒப்படைக்கப்படும்...

    மறுவாழ்வு

    மறுவாழ்வு


    அதாவது, ஐநாவின் அகதிகள் மறுவாழ்வு அமைப்பு, யுனிசெப், சர்வதேச குடிபெயர் மக்கள் நல அமைப்பு, உலக சுகாதார நிறுவனம் போன்றவற்றிடம் இந்த பணத்தை தந்துவிடுவோம்.. ஆனால், இதை நாங்கள் தாலிபன்களுக்கு தரவில்லை.. அங்குள்ள பாதிக்கப்பட்ட மக்களுக்காகத்தான் செய்கிறோம்.. எங்கள் உதவி சுமார் 1 கோடியே 80 லட்சம் மக்களுக்கு போய் சேரும் என்று நம்புகிறோம்..

    பாதிப்புகள்

    பாதிப்புகள்

    அதுமட்டுமல்ல, ஆப்கன் அகதிகளுக்காகவே இந்த வருஷம் ரூ.3,500 கோடி வரை நிதியை அதிகரித்துள்ளோம்... மக்களின் உணவு தேவை, சுகாதார வசதிகள், பனிக்காலத்தில் ஏற்படும் பாதிப்புகள், அவசர தேவைகள் போன்றவற்றிற்கும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், ஊட்டச்சத்து குறைபாடு போன்றவற்றிற்கு அந்த நிதி உதவியாக இருக்கும்.. இன்னொன்றையும் சொல்லி கொள்கிறோம்.. ஆப்கன் மக்களுக்காக எப்போதுமே நாங்கள் உதவி செய்ய தயாராக இருக்கிறோம்" என்றார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+