ஜம்மு காஷ்மீர்: பிடிபி-பாஜக பேச்சுவார்த்தையில் தொடர்ந்து முட்டுக்கட்டை- இழுபறி நீடிப்பு
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் மக்கள் ஜனநாயகக் கட்சி (பிடிபி) மற்றும் பாஜக இடையேயான பேச்சுவார்த்தையில் முட்டுக்கட்டை தொடர்வதால் புதிய ஆட்சி அமைப்பதில் இழுபறி நிலை நீடிக்கிறது.
ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தல் கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பரில் நடைபெற்றது. மொத்தமுள்ள 87 இடங்களில் மக்கள் ஜனநாயக கட்சி 27, பாஜக 25, தேசிய மாநாட்டு கட்சி 15, காங்கிரஸ் 12 தொகுதிகளைக் கைப்பற்றின. பெரும்பான்மையை நிரூபிக்க 45 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தேவை. 3 மாத இழுபறிக்குப் பிறகு மக்கள் ஜனநாயக கட்சியும் பாஜகவும் இணைந்து கடந்த ஆண்டு மார்ச்சில் கூட்டணி அரசை அமைத்தன.

மக்கள் ஜனநாயக கட்சியின் மூத்த தலைவர் முப்தி முகமது சையது முதல்வராகவும் பாஜக மூத்த தலைவர் நிர்மல் குமார் சிங் துணை முதல்வராகவும் பொறுப்பேற்றனர். இந்நிலையில் உடல்நலக் குறைவால் முதல்வர் முப்தி முகமது சையது கடந்த ஜனவரி மாதம் காலமானார். இதனைத் தொடர்ந்து முப்தி முகமது மகளும் மக்கள் ஜனநாயகக் கட்சி தலைவருமான மெகபூபா முஃப்தி, அம்மாநில முதல்வராக பதவியேற்கக் கூடும் எனக் கூறப்பட்டது.
ஆனால் மெகபூபா உடனே பதவியேற்கவில்லை. அவரது தந்தையின் இறுதிச் சடங்கு முடிந்த பின்னர் பதவியேற்பார் எனவும் கூறப்பட்டது. ஆனால் ஜம்மு காஷ்மீரில் அமலில் உள்ள ஆயுதப்படை சட்டத்தை படிப்படியாக வாபஸ் பெற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக பாஜக உறுதி அளித்தால்தான் முதல்வர் பதவி ஏற்பேன் என மெகபூபா பிடிவாதம் காட்டினார்.
இதனால் ஜம்மு காஷ்மீரில் புதிய அரசு பதவியேற்பதில் முட்டுக்கட்டை விழுந்தது. இதனைத் தொடர்ந்து புதிய அரசு பதவியேற்கும் வரை அம்மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. இதனிடையே பிடிபி மற்றும் பாஜக இடையே தொடர்ச்சியாக பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.
ஆனாலும் இந்த பேச்சுவார்த்தையில் எந்த ஒரு முன்னேற்றமும் ஏற்படாத நிலையே தொடர்கிறது. மெகபூபாவின் பிடிவாதத்துக்கு பிடிபி கட்சிக்குள்ளேயே எதிர்ப்பும் எழத் தொடங்கியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
அப்படியே ஆர்எஸ்எஸ் ஸ்டைல்.. அரசியல் பயிற்சி மையம் உருவாக்கும் அண்ணாமலை.. இதுதான் பின்னணி! -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
அண்ணாமலை போய்ட்டாரு.. ஆந்திராவில் எதுக்கு ராஜ்யசபா சீட்டு.. கைவிட்ட பாஜக -
பாஜகவின் பிளான் 'பி'.. அண்ணாமலை பின்னால் ஆர்எஸ்எஸ்! மாணிக்கம் தாகூர் வார்னிங்! -
அண்ணாமலை புதிய அரசியல் இயக்கம் அறிவிப்பு.. அடுத்த பொதுத்தேர்தலில் போட்டியிட போவதாகவும் அதிரடி -
மோடியை சந்தித்த அண்ணாமலை? மீண்டும் தமிழக பாஜக தலைவராக்க டெல்லி தலைமை திட்டம்? -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
Annamalai: புதிய கட்சியா.. பாஜகவில் நீடிப்பாரா.. நாளை 12 மணிக்கு முடிவை அறிவிக்கும் அண்ணாமலை? -
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்! -
பாஜக பருப்பு இனி வேகாது.. 6 வருஷத்துக்கு பின் அண்ணாமலைக்குத் தெரிந்த உண்மை! உடைத்த ஜோதிமணி எம்பி!












Click it and Unblock the Notifications