கர்நாடகத்தில் தமிழர்கள் வாழும் பகுதிகளில் பதற்றம் நீடிப்பு... பாதுகாப்பு அதிகரிப்பு
பெங்களூரு: காவிரி பிரச்சனைத் தொடர்பாக கர்நாடகத்தில் தமிழர்களுக்கு எதிராக வெடித்துள்ள கலவரத்தில் தமிழர்கள் வீடுகள், கடைகள் உள்ளிட்ட சொத்துக்கள் குறி வைத்து தாக்கப்பட்டு வருகின்றன. கர்நாடகாவில் உள்ள இந்திராநகர் மற்றும் விஜய்நகர் உள்ளிட்ட தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளில் இன்னும் பதற்றம் நீடித்து வருகிறது.
காவிரியில் இருந்து செப்டம்பர் 20ம் தேதி வரை நாளொன்றுக்கு 12 ஆயிரம் கன அடி தண்ணீரை தமிழகத்திற்கு தர வேண்டும் என்று கர்நாடகத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து பெங்களூருவில் தமிழர்கள் சொத்துக்கள், வாகனங்கள் குறித்து வைத்து தாக்கப்பட்டு வருகின்றன. இதனையடுத்து பாதுகாப்பு கருதி தமிழர்கள் கடைகளை மூடுமாறு அம்மாநில போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

இந்நிலையில், பெங்களூரில் தமிழர்கள் அதிகம் வாழும் இந்திரா நகர், விஜய் நகர் உள்ளிட்ட பகுதிகளில் இன்னும் பதற்றம் தொடர்ந்து நீடித்து வருகிறது. மேலும் உல்சூர் டன்னரி சாலை உள்ளிட்ட தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
அங்கு பதற்றம் நிலவி வருவதால், கேஎஸ்ஆர்டிசி, ஆர்டிசி பேருந்துகள் முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் பெங்களூர் பேருந்து நிலையங்களிலும் கூட்டம் அலை மோதுகிறது. பஸ் நிலையங்களில் ஆயிரக்கணக்கானோர் தவித்து வருகின்றனர்.
மெஜஸ்டிக், சிவாஜிநகர் பேருந்து நிலையங்களில் முற்றிலும் பேருந்துகள் ஓடவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் அங்கு மக்கள் தவிப்புக்குள்ளாகியுள்ளனர்.
-
பெங்களூர்: என்னடா அநியாயம் பண்றீங்க.. வீட்டு வாடகை ரூ.1.1 லட்சமா.. அதிர்ச்சியில் ஐடி ஊழியர்கள்! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications