டெல்லியில் 7வது நாளாக தொடரும் போராட்டம்.. பாதி மொட்டை அடித்த தமிழக விவசாயிகள்
டெல்லி: மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் தமிழக விவசாயிகள் சிலர் பாதி மொட்டை அடித்து போராட்டம் ஈடுபட்டனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல், கடன்கள் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் தமிழக விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அய்யாக்கண்ணு தலைமையில் சுமார் 50 விவசாயிகள் கடந்த 16-ந்தேதி முதல் டெல்லி ஜந்தர்மந்தர் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஒவ்வொரு நாளும் விதவிதமான போராட்ட முறைகளை மேற்கொண்டு வரும் விவசாயிகள் தங்கள் தலையில் தாங்களே செருப்பால் அடித்துக்கொண்டு மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக முழக்கமிட்டனர்.
பின்னர் தங்களைத் தானே துடைப்பத்தால் அடித்துக்கொண்டு ஊர்வலமாகச் சென்றனர். அப்போது மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக அவர்கள் கோஷமிட்டனர். இந்நிலையில் 7வது நாளான நேற்று அனைத்து விவசாயிகளும் மனித மண்டை ஓடுகள், விஷ பாட்டில்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது விவசாயிகளில் சிலர் தலையில் பாதி மொட்டையடித்து, அதாவது முன் பக்கத்தில் மட்டும் முடிகளை மழித்துக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து அய்யாக்கண்ணு கூறுகையில், மத்திய, மாநில அரசுகள் எங்களை கண்டு கொள்ள மறுக்கின்றன. இந்த அரசுகள் விவசாயிகளை பாதி மொட்டையடித்து விட்டன. அதை உணர்த்தும் வகையில் போராட்டம் நடத்தினோம் என்றார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications