'சௌபாக்யா யோஜனா’... தமிழர்களே, உங்கள் முதுகை நீங்களே தட்டிக் கொள்ளுங்கள்!
இந்தியாவில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் 2019-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதிக்குள் மின் இணைப்பு வசதியை பெற்றுத் தர 'சௌபாக்யா யோஜனா' என்ற திட்டத்தை பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
நிற்க!
தமிழகத்தில் 35 ஆண்டுகளுக்கு முன்பு கிராமப்புறகளில் மின் வசதியினை இணைக்கும் பணி தொடங்கப்பட்டது. தொடர்ச்சியாக திராவிட ஆட்சிகளில் முன்னெடுக்கப்பட்ட மின் கட்டமைப்பு மேம்பாட்டு வசதிகளால் தமிழகத்தில் உள்ள வீடுகளுக்கான மின் இணைப்பு விகிதம் புள்ளிவிபரப்படி:
2001 ஆம் ஆண்டு - 78.2%
2007 ஆம் ஆண்டு - 93.4%
2017 ஆம் ஆண்டு - 98.3%

இவை எல்லாம் இந்தியே தெரியாத தமிழக ஆட்சியாளர்களால்தான் சாத்தியமானது என யோசிக்கும்போது மொழியின் பெயரால் சல்லியடிக்கும் பொய்யர்களின் முகத்திரை தற்போது கிழிந்துள்ளது. பெரியார், அண்ணா பெயரால் சமூக திட்டங்கள் தமிழகத்தில் வரும் போதெல்லாம் இலவசத்தால் தமிழகம் சீரழிகிறது என ஒப்பாரி வைக்கும் கூட்டத்திற்கு இப்போது மோடியின் யோஜனா அறிவிப்புகள் மயிர் கூச்செறிய வைக்கிறது.
இந்தியை தாய்மொழியாக அல்லது அலுவல் மொழியாக கொண்ட மாநிலங்களில் வீடுகளுக்கு தரப்பட்டுள்ள மின் இணைப்பு வசதியின் விகிதம் 2017 ஆம் ஆண்டு புள்ளி விபரப்படி:
பீகார் 58.6%
உத்திர பிரதேசம் 70.9%
மத்திய பிரதேசம் 89.9%
அரியனா 91.7%
ஜார்கண்ட் 80.1%
மகாராஸ்ட்ரா 92.5%
ராஜஸ்தான் 91%
உத்திரகான்ட் 97.5%
2017 ஆம் ஆண்டில் மோடி சொல்வதை 35 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகம் தொடங்கியதன் விளைவு இன்று 98.3% மின் இணைப்பு வசதியினை தமிழகம் பெற்றுள்ளது. இந்தியை தாய்மொழியாக, அலுவல் மொழியாக கொண்ட மாநிலங்களை விடவும் இந்தி மொழியே தெரியாத தமிழகத்தின் வீடுகள் மின் இணைப்பினைப் பொறுத்த வரை அதிக தன்னிறைவை அடைந்துள்ளது. ஆகையால் இந்தி படித்தால் வடக்கே வேலை கிடைக்கும் என்ற பொய்யுரைகளை வழி மொழியும் கூட்டத்திடம் இருந்து விலகி நில்லுங்கள்.
இந்தியாவின் 'செளபாக்யா யோஜனா' போன்ற தன்னிறைவு தேடும் திட்டங்களுக்கு நிரூபணம் செய்யப்பட்ட தமிழகம் எப்போதுமே முன் மாதிரிதான். அந்த வகையில் தமிழர்கள் உங்கள் முதுகில் நீங்களே தட்டிக் கொடுத்துக் கொள்ளுங்கள்.
- முனைவர். சுதாகர் பிச்சைமுத்து
-
கேள்வி கேட்டா கரண்ட் வருமா? வாய் விட்ட மகேந்திரன்! வறுத்தெடுத்த நெட்டிசன்கள்! இப்போ மன்னிப்பு வீடியோ -
நயினார் நாகேந்திரனுக்கு.. கேரள ஆளுநர் பதவி! அள்ளிக்கொடுக்கும் பாஜக! அப்போ.. அண்ணாமலை ரூட் சரிதான்! -
பெண்கள் வாழ தகுதியற்ற தமிழ்நாடு..? நாங்க என்ன தப்பு செய்தோம்..? அறந்தாங்கி நிஷா ஆதங்கம் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பிரபலங்களால் பாஜகவுக்கு ப்ராப்ளம்.. தவெகவுக்கு தாவும் 2 நடிகைகள்! பக்கா பிளான் போட்ட செங்கோட்டையன்! -
சுழல்கள் நிறைந்த சாலக்குடி ஆற்றின் பாறை இடுக்கில் சிக்கிய தமிழக இளைஞர்! கயிறு கட்டி மீட்ட ராணுவ வீரர்! -
கரண்ட் கட்.. போராட்டமாக மாறிய பொதுக்கூட்ட மேடை! சூடான திமுகவினர்! சென்னையில் சலசலப்பு! -
குற்றங்கள் நடைபெறாமல் தடுக்க என்ன நடவடிக்கை?.. தமிழக அரசுக்கு அண்ணாமலை சரமாரி கேள்வி -
அண்ணாமலையின் புதிய அரசியல் அத்தியாயம்! செப்டம்பர் 14ல் வெளியாகிறது கட்சிப் பெயர்? -
3வது இடம்.. 2026ல் மண்ணைக் கவ்விய அதிமுக! தோல்விக்கு என்ன காரணம்? உங்க கருத்தை சொல்லுங்க மக்களே! -
ஓமன் அருகே கப்பலில் உயிரிழந்த தமிழக மாலுமி.. குளிர்ந்த நீரால் உடலை பாதுகாக்க போராடும் சக ஊழியர்கள் -
திருவள்ளூர் முட்புதரில் 3 வயது குழந்தை... ஒரே நாளில் 5 சிறுமிகளுக்கு கொடுமை! சிங்கப்பெண் படை எங்கே?












Click it and Unblock the Notifications