For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மது குடிப்பதற்காக கொட்டிக்கொடுக்கும் தமிழகம்! தேசிய அளவில் 7வது இடம்

By Veera Kumar
Google Oneindia Tamil News

டெல்லி: மதுவுக்காக அதிகப்படியாக செலவிடுவதில் இந்திய அளவில் தமிழகம் 7வது இடத்தில் உள்ளது என்று புள்ளி விவரம் ஒன்று தெரிவிக்கிறது.

பீகார் மாநிலம் படிப்படியாக, மது பழக்கத்தை குறைக்க நடவடிக்கையை தொடங்கிவிட்டதாக முதல்வர் நிதீஷ்குமார் அறிவித்துள்ளார்.

இந்நிலையில், 2011-2012ம் ஆண்டு காலகட்டத்தில், எடுக்கப்பட்ட தேசிய மாதிரி சர்வே வால்ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிகையில் வெளியாகியுள்ளது. அதில் புகை பிடித்தல், மது குடித்தல் போன்ற இழி செயல்களில் ஈடுபடுவோர் செலவிடும் தொகை கணக்கிடப்பட்டுள்ளது.

தமிழகம் 7வது இடம்

தமிழகம் 7வது இடம்

சராசரியாக மதுவுக்காக ஒரு மாதத்தில் மக்கள் செலவிடும் தொகை அடிப்படையில் தமிழகம் 7வது இடத்தை பிடித்துள்ளது.

முதலிடம்

முதலிடம்

இந்த பட்டியலில் வடகிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசம் முதலிடத்திலுள்ளது. மாதம் சராசரியாக ரூ.127.32 அங்கு மதுவுக்காக செலவிடப்படுகிறது. 2வது இடமும் வடகிழக்கு மாநிலமான சிக்கிமுக்கு போகிறது. அங்கு ரூ.100.35 செலவிடப்படுகிறது.

ஆந்திரா அல்லோகலம்

ஆந்திரா அல்லோகலம்

மூன்றாவது இடத்தை ஆந்திரா பிடித்துள்ளது. ரூ.92.19 செலவிடப்படுகிறது. ஹிமாச்சல பிரதேசத்தில் ரூ.83.05ம், கேரளாவில் ரூ.80.27ம் செலவிடப்படுகிறது.

பஞ்சாப்புக்கு பின் தமிழகம்

பஞ்சாப்புக்கு பின் தமிழகம்

70.04 ரூபாய் செலவிடும் பஞ்சாப் 6வது இடத்திலுள்ள நிலையில், தமிழகம் 7வது இடம்பிடித்துள்ளது. இங்கு மதுவுக்காக ஒரு மாதத்தில் செலவிடப்படும் சராசரி மதிப்பு ரூ.54.7 ஆகும்.

குஜராத் பெஸ்ட்

குஜராத் பெஸ்ட்

தமிழகத்தை தொடர்ந்து டெல்லியும், அதன்பிறகு கர்நாடகாவும் இப்பட்டியலில் வருகின்றன. நாட்டிலேயே குஜராத்தில்தான் மதுவுக்காக செலவிடும் தொகை குறைவு. இங்கு மாதம் சராசரியாக ரூ.5.4 செலவிடப்படுகிறது.

குஜராத்தில் மதுவிலக்கு அமலில் உள்ள நிலையிலும் அந்த மாநில மக்கள் இந்த தொகையை செலவிடுகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்திய சராசரி

இந்திய சராசரி

மதுவிற்காக செலவிடும் பண மதிப்பு பட்டியலில் ஒட்டுமொத்த இந்தியாவின் சராசரி மதிப்பு ரூ.20.26 ஆகும். சராசரி அளவைவிட தமிழகத்தின் அளவு மிக அதிகமாக இருப்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல பான்மசாலா பொருட்களுக்காக தமிழகத்தில் செலவிடப்படும் சராசரி தொகை ரூ.11.8 எனவும் தெரியவந்துள்ளது.

English summary
Tamilians spend 54 rupees for a month on alcoholic beverages higher than the national average of 20.26 rupees according to the National Sample Survey, conducted by the federal government, between July 2011 and June 2012.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X