தெலுங்கானா மாநில ஆளுநராக தமிழிசை சவுந்திரராஜன் நியமனம்
Recommended Video
டெல்லி: தெலுங்கானா மாநில ஆளுநராக தமிழிசை சவுந்திரராஜன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தெலுங்கானா, ஹிமாச்சல் பிரதேசம், மகாராஷ்டிரம், கேரளம் ஆகிய மாநிலங்களுக்கு ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் தெலுங்கானா மாநில ஆளுநராக தமிழிசை சவுந்திரராஜன் நியமிக்கப்பட்டார்.
ஒருங்கிணைந்த ஆந்திரத்தின் ஆளுநர் நரசிம்மன் இருந்து வருகிறார். கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் இவரே ஆந்திரம், தெலுங்கானா ஆகிய இரு மாநிலங்களுக்கும் ஆளுநராக இருந்து வருகிறார். இந்த நிலையில் தற்போது தெலுங்கானாவுக்கு ஆளுநராக தமிழிசை நியமிக்கப்பட்டுள்ளார்.

ஹிமாச்சல் பிரதேசம்
கேரள ஆளுநராக இருந்த சதாசிவம் மாற்றப்பட்டு ஆரிப் முகமது கான் நியமிக்கப்பட்டுள்ளார். அது போல் ஹிமாச்சல் பிரதேசத்தின் ஆளுநராக பண்டாரு தத்தாட்ரேயா நியமிக்கப்பட்டுள்ளார்.

ராஜஸ்தான்
மகாராஷ்டிரத்தின் ஆளுநராக பகத் சிங் கோஷ்யாரியும் நியமிக்கப்பட்டுள்ளனர். அது போல் ஹிமாச்சல் பிரதேசத்தின் ஆளுநராக இருந்த கல்ராஜ் மிஸ்ரா ராஜஸ்தான் மாநில ஆளுநராக மாற்றப்பட்டுள்ளார். கல்யாண் சிங்கிற்கு பதில் கல்ராஜ் நியமிக்கப்பட்டார்.

நியமனம்
தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் கடந்த 2014-ஆம் ஆண்டு நியமனம் செய்யப்பட்டார். இதையடுத்து அவரது பதவிக்காலம் முடிந்த நிலையில் அவரே மீண்டும் அப்பதவிக்கு நியமனம் செய்யப்பட்டார்.

விடுவிப்பு
இந்த நிலையில் அவரது பதவிக்காலம் வரும் டிசம்பர் மாதம் முடிவடைகிறது. தற்போது அவர் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளதால் பாஜக தலைவர் பதவியிலிருந்து விடுவிக்கப்படுவார்.












Click it and Unblock the Notifications