விவசாயிகள் தற்கொலையில் 7வது இடம் தமிழகம்.. உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்
இந்திய அளவில் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்வது குறித்து உச்ச நீதிமன்றத்தில் நடக்கும் வழக்கில் மத்திய அரசு பதில் அளித்துள்ளது.அதில்,ஆண்டுக்கு 12,000திற்கும் மேல் விவசாயிகள் இந்தியாவில் தற்கொலை செய்து
டெல்லி: கடும் வறட்சி,வங்கிக் கடன் தொல்லை என பல்வேறு இன்னல்களில் சிக்கி தவிக்கும் இந்திய விவசாயிகள் அடிக்கடி தற்கொலை செய்துகொள்கின்றனர்.கடந்த 2013 ம் ஆண்டு முதல் ஆண்டுக்கு 12,000 க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கின்றனர் என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய அளவில், விவசாயிகள் தற்கொலையை தடுக்க மத்திய அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்த பொதுநல வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான மத்திய அரசின் வழக்கறிஞர் பி.எஸ்.நரசிம்மா, விவசாயிகளுக்காக மத்திய அரசு கொண்டு வந்துள்ள நலத்திட்டங்கள் குறித்த பட்டியலை வாசித்தார்.

மேலும் நிதி ஆயோக் மூலம் விவசாயிகளுக்கு ஒதுக்கப்படும் நிதி குறித்தும் நரசிம்மா தெரிவித்தார். அப்போது அவர், விவசாயிகளின் வருமானத்தை பெருக்க அரசு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதிக எண்ணிக்கையிலான விவசாயிகள் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளதால் எதிர்பாராதவிதமாகத் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்கள் நடக்கின்றன. மத்திய அரசு வரும் 2022 ம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானத்தை இருமடங்காக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றும் நரசிம்மா தெரிவித்தார்.
தற்கொலையில் தமிழகம் 7வது இடம்
மத்திய அரசின் வழக்கறிஞர் நரசிம்மா கோர்ட்டில் அளித்துள்ள புள்ளிவிபரத்தின்படி,சென்ற 2015 ம் ஆண்டில் மகாராஷ்டிரா மாநிலம் விவசாயிகள் தற்கொலையில் முதலிடத்தில் உள்ளது. அம்மாநிலத்தில் 4291 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் 1569 பேரும், தெலுங்கானாவில் 1400 பேரும், மத்திய பிரதேசத்தில் 1290 பேரும், சட்டீஸ்கர் மாநிலத்தில் 954 பேரும், ஆந்திராவில் 916 பேரும், தமிழகத்தில் 606 விவசாயிகளும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
கடந்த 2013ம் ஆண்டு 11,772 ஆக இருந்த விவசாயிகள் தற்கொலை எண்ணிக்கை 2014 ல் 12,360 ஆக அதிகரித்துள்ளது என்பதை புள்ளிவிவரம் வெளிப்படுத்துகிறது.
-
வங்கி கடன் செட்டில்மென்ட்.. உச்ச நீதிமன்ற தீர்ப்பால் கடன் வாங்கியவர்கள் மகிழ்ச்சி -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
உச்ச நீதிமன்றத்தில் நேரடியாக நீதிபதியான 2-வது பெண் வழக்கறிஞர்! கோவையை சேர்ந்த மோகனா.. பின்னணி -
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications