150 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சுழற்றி அடித்த பேய்க்காற்று.. குலை நடுங்கிய கொல்கத்தாவாசிகள்
கொல்கத்தா: 150 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கொல்கத்தாவில் ஆம்பன் புயலால் சூறாவளி காற்று வீசியது என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொல்கத்தாவை ஒரு புரட்டு புரட்டி எடுத்த ஆம்பன் புயல், அப்போது விட்டு சென்ற பேரழிவை கொல்கத்தாவில் சரி செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஆம்பன் புயல் கரையை கடந்த போது மணிக்கு 130 கி.மீ. வேகத்தில் காற்று வீசியது.
அதிலும் டம்டம் விமான நிலையத்தில் காற்று வீசி மழை பெய்ததால் அந்த இடமே தண்ணீரில் மிதந்தது. கடந்த 100 ஆண்டுகளில் இது போன்ற ஒரு காற்றையும் சேதத்தையும் சந்தித்ததே இல்லை என்கிறார்கள்.

கொல்கத்தா
இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் தனது பேஸ்புக் பக்கத்தில் கூறுகையில் கடந்த 150 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஆம்பன் புயல் கொல்கத்தாவை புரட்டி போட்டுள்ளது. இதில் எந்த சந்தேகமும் இல்லை. கொல்கத்தாவின் மிக முக்கியமான விமான நிலையத்தில் மணிக்கு 130 கி.மீ. வேகத்தில் காற்று வீசியதாக பதிவாகியுள்ளது. 100 ஆண்டுகளில் இதுபோன்ற காற்றை இந்த விமான நிலையம் சந்தித்தே இல்லை.

பெருத்த சேதம்
கடந்த 2009 ஆம் ஆண்டு கொல்கத்தாவை ஐலா புயல் நெருங்கியது. அது ஆம்பனை விட 30 சதவீதம் வலுவிழந்தது. இதனால் பெருத்த சேதம் ஏதும் இல்லை. ஆம்பன் விவகாரத்தில் புயலின் கண் சரியாக கொல்கத்தா நகரை கடந்தது. கொல்கத்தாவில் புயல் மூலம் அதிகபட்சமாக வீசிய காற்று, சூறாவளிகள் குறித்து பார்ப்போம்.

இதுவரை கொல்கத்தாவில் ஏற்பட்ட புயல் காற்று
இதுவரை கொல்கத்தாவில் மணிக்கு 60 கி.மீ. வேகத்தை தாண்டிய வீசிய புயல்காற்றுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
- ஆம்பன் புயல் (2020)- டம்டம் மணிக்கு 130 கி.மீ., அலிபோர் மணிக்கு 112 கி.மீ.
- ஐலா புயல் (2009)- பாராக்பூர் மணிக்கு 112 கி.மீ. அலிபோர் 95 கி.மீ., டம்டம் 70 கி.மீ.
- 1971 செப்டம்பர் புயல்- டம்டம் மணிக்கு 93 கி.மீ.
- 1937 செப்டம்ர் புயல்- அலிபோர் மணிக்கு 93 கி.மீ.
- 1896 ஜூன் புயல்- அலிபோர் 83 கி.மீ.
- 1988 அக்டோபர் புயல்- டம்டம் 80 கி.மீ.
- 1974 ஆகஸ்ட் புயல்- டம்டம் 74 கி.மீ.
- 2002 மேற்கு வங்க புயல்- டம்டம் மணிக்கு 74 கி.மீ.
- 1916- செப்டம்பர் புயல்- அலிபோர் 74 கி.மீ.
- 1932- மே புயல்- அலிபோர் 74 கி.மீ.
- 1936 மே புயல்- அலிபோர் 74 கி.மீ.
- 1940 ஜூன் புயல்- அலிபோர் 74 கி.மீ
- 1888 ஆகஸ்ட் புயல்- அலிபோர் 68 கி.மீ.
- 1901 நவம்பர் புயல்- அலிபோர் 65 கி.மீ.
- 1889 ஆகஸ்ட் புயல்- அலிபோர் 63 கி.மீ.
- 1962 செப்டம்பர் புயல்- அலிபோர் 60 கி.மீ.
- புயல் புல்புல் (2019)- அலிபோர் 60 கி.மீ.
என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

வெயில்
கொல்கத்தாவில் இதுபோன்றதொரு மழையையும் புயல் காற்றையும் அனைத்து தலைமுறையினரும் தற்போது தான் பார்க்கின்றனர். அந்த அளவுக்கு ஆக்ரோஷமாக இருந்தது ஆம்பன். கோடிக்கணக்கில் சேதத்தை ஏற்படுத்திச் சென்ற இந்த புயல், தமிழகத்திற்கு கடும் வெயிலையும் கொடுத்துவிட்டு சென்றது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications