தமிழகத்தில் இன்றும் இடியுடன் மழை வெளுக்குமாம்.. இந்திய வானிலை மையம் தகவல்!
தமிழகத்தில் இன்று இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
டெல்லி: தமிழகத்தில் இன்று இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை உட்பட தமிழகத்தின் பல பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வந்தது. இதனால் மக்கள் பெரும் அவதியடைந்தனர்.
இந்நிலையில் நேற்று பிற்பகல் முதல் சென்னை மற்றும் தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும் மழை பலத்த காற்று மற்றும் இடியுடன் மழை வெளுத்தது. சென்னை மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளில் நள்ளிரவு முதல் கனமழை பெய்தது.

நள்ளிரவு முதல் மழை
நுங்கம்பாக்கம், சைதாப்பேட்டை, கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், அண்ணாநகர், கீழ்ப்பாக்கம், எழும்பூர், வேப்பேரி, வளசரவாக்கம், போரூர், ராமாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் நள்ளிரவு முதல் மழை பெய்தது.

வாகன ஓட்டிகள் சிரமம்
வளசரவாக்கம் உள்ளிட்ட பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. விடிய விடிய பெய்த மழையால் பல இடங்களில் சாலைகளில் மழை தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமம் அடைந்துள்ளனர்.

இடியுடன் கூடிய மழை
இந்நிலையில் தமிழகத்தில் இன்று இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் ஏற்பட்டு மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழை பெய்யும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

காற்றழுத்தமாக மாறும்
மேலும் இந்த மேலடுக்கு சுழற்சி காற்றழுத்தமாக மாறும் என்றும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் கடல் சீற்றத்துடன் காணப்படும் என்றும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
கத்திரி வெயில் முடிஞ்சுபோச்சு.. சென்னை உட்பட 5 மாவட்டங்களில் இன்று காலையிலேயே மழைக்கு வாய்ப்பு! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம்












Click it and Unblock the Notifications