20 தமிழக தொழிலாளிகள் படுகொலையை கண்டித்து பெங்களூரில் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்
பெங்களூர்: ஆந்திராவில் தமிழகத்தைச் சேர்ந்த 20 தொழிலாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதை கண்டித்து பெங்களூரில் கர்நாடக தமிழ் குடும்பங்கள் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள சேஷாசலம் மலைப்பகுதியில் செம்மரங்களை வெட்டியதாகக் கூறி அம்மாநில போலீசாரும், வனத் துறையினரும் சேர்ந்து நடத்திய துப்பாக்கிச்சூட்டில் தமிழகத்தைச் சேர்ந்த 20 தொழிலாளர்கள் பலியாகினர். செம்மரக் கடத்தல்காரர்களை விட்டுவிட்டு பிழைப்புக்காக மரம் வெட்டியவர்களை ஆந்திரா போலீசார் சுட்டுக் கொன்றதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

ஆந்திர போலீசாரோ தாங்கள் சோதனை நடத்த சென்றபோது மரம் வெட்டியவர்கள் தங்களை தாக்க வந்ததாகவும் அதனால் தற்காப்புக்காக அவர்களை சுட்டதாகவும் தெரிவித்துள்ளனர். ஆந்திர போலீசார் பொய் சொல்கின்றனர் என்றும், அவர்கள் திட்டமிட்டே இந்த படுகொலையை செய்ததாகவும் ஆர்வலர்கள், அரசியல் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் 20 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதை கண்டித்து பெங்களூரில் கர்நாடக தமிழ் குடும்பங்கள் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான தமிழர்கள் கலந்து கொண்டனர்.
தமிழர்கள் படுகொலை குறித்து பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும், இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும், பலியானவர்களின் குடும்பங்களுக்கு தமிழக அரசு கூடுதலாக நிவாரணம் வழங்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோஷமிட்டனர்.
-
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications