தாராபுரத்தில் சோகம்.. ஆற்றில் குளிக்க சென்ற 5 மாணவர்கள் உட்பட 6 பேர் பலி.. பரிதாப சம்பவம்
தாராபுரம்: தாராபுரம் அமராவதி ஆற்றில் மூழ்கி 6 பேர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோயிலுக்கு வழிபட சென்றுவிட்டு திரும்பி குளிக்க சென்றபோது இந்த சோகமான சம்பவம் நடந்துள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் பொங்கல் பண்டிகை முடிந்ததை அடுத்து மாம்பாறை என்ற இடத்தில கடா வெட்டு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இது ஆண்கள் மட்டும் நடத்தும் பாரம்பரிய கடா வெட்டு நிகழ்ச்சி ஆகும்.

இந்த நிகழ்ச்சி முடிந்த பின் அங்கிருந்த ஆண்கள் குழு ஒன்று தாராபுரம் கோவிலுக்கு சென்று வழிபட்டுள்ளனர். தாராபுரம் கோவிலுக்கு சென்றுவிட்டு திரும்பும் வழியில் அமராவதி ஆற்றில் குளித்து உள்ளனர்.
20க்கும் அதிகமானோர் ஆற்றில் குளித்த நிலையில், 6 பேர் ஆற்று சூழலில் சிக்கி நீரில் அடித்து செல்லப்பட்டனர். 5 மாணவர்கள் உட்பட 6 பேர் ஆற்று நீரில் அடித்து செல்லப்பட்டனர். இதையடுத்து 6 பேரையும் தேடும் பணி முடுக்கிவிடப்பட்டது. அப்பகுதி கிராம மக்கள், தீயணைப்பு படையினர் அங்கு வந்து பல மணி நேரமாக 6 பேரையும் தேடினர்.
சில மணி நேர தேடலுக்கு 6 பேரின் உடல்களும் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டது. இந்த விபத்தில் மோகன், ரஞ்சித், ஸ்ரீதர், சக்கரவர்த்தி, அமீர், யுவன் ஆகிய 6 பேர் பலியானார்கள். முதலில் ஒரு மாணவர் ஆற்றின் ஆழமான பகுதியில் குளிக்க சென்றுள்ளார்.
அவரை மீட்க சென்ற போது அடுத்தடுத்து 8 பேர் நீரில் அடுத்து செல்லப்பட்டனர் என்று விசாரணையில் தெரிய வந்துள்ளது. 2 பேர் உடனடியாக மீட்கப்பட்ட நிலையில் 6 பேர் நீரில் மூழ்கி பலியாகி உள்ளனர். இதில் சக்கரவர்மன், ஸ்ரீதர், ரஞ்சித், யுவன் பேர் கல்லூரி மாணவர்கள் ஆவர். மோகன் என்ற நபர் பள்ளி மாணவர் ஆவார்.
6 பேர் ஒரே நேரத்தில் ஆற்றில் மூழ்கி பலியான சம்பவம் அங்கு பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications