டாட்டூவால் சிக்கிய நண்பனை கொன்று நாடகமாடிய நபர்
இந்தூர்: மத்திய பிரதேசத்தில் டாட்டூவை வைத்து போலீசார் கொலைக் குற்றவாளியை கைது செய்துள்ளனர்.
மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பவ்சிங். இந்தூர் மத்திய சிறையில் இருந்த அவர் 15 நாட்கள் பரோலில் கடந்த 10ம் தேதி வெளியே வந்தார். அவர் தனது நண்பர் சுரேஷுக்கு(30) போன் செய்து உனக்கு திருமணத்திற்கு பெண் பார்க்க உஜைலியா கிராமத்திற்கு வா என்று அழைத்துள்ளார்.
உஜைலியாவுக்கு கடந்த 18ம் தேதி வந்த சுரேஷை பவ்சிங் தலையில் கல்லால் அடித்து கொன்று அவரது தலையை அடையாளம் தெரியாத அளவுக்கு சிதைத்துவிட்டார். பின்னர் தான் பரோலில் வந்த ஆவணங்கள் மற்றும் தனது அடையாள அட்டையை சுரேஷின் பாக்கெட்டில் வைத்துவிட்டார். போலீசார் வந்தால் கொலை செய்யப்பட்டது தான் தான் என்று நம்பும் அளவுக்கு பவ்சிங் செயல்பட்டார்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றினர். முதலில் அவர் பவ்சிங் என்று நினைத்த போலீசாருக்கு சடலத்தின் கையில் சுரேஷ் என்று எழுதப்பட்ட டாட்டூவை பார்த்து சந்தேகம் எழுந்தது. இதையடுத்து போலீசார் பவ்சிங்கின் குடும்பத்தாரை தொடர்பு கொண்டு சடலத்தை அடையாளம் காட்டுமாறு கூறினார்கள். அதற்கு அவர்கள் மறுப்பு தெரிவித்ததோடு பவ்சிங் எங்கிருக்கிறார் என்று தங்களுக்கு தெரியாது என்று கூறினர்.
பின்னர் பவ்சிங்கின் செல்போன் அழைப்புகள் குறித்து விசாரணை நடத்தியபோது அதில் இருந்த பிரகாஷ் என்பவரின் எண்ணில் தொடர்பு கொண்டு போலீசார் பேசினர். அவர் வந்து உடலை பார்த்து அது தன் தம்பி சுரேஷ் என்று அடையாளம் காட்டினார்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் பவ்சிங்கை செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
-
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications