Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

‘தி கேரளா ஸ்டோரி' விழிப்புணர்வு படம்.. மத்திய பிரதேசத்தில் வரிவிலக்கு.. முதல்வர் சிவராஜ் சிங் அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

போபால்: மத்திய பிரதேச மாநிலத்தில் 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்துக்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதை அதிகாரப்பூர்வமாக அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் அறிவித்துள்ளார். நாங்கள் கட்டாய மதமாற்றத்திற்கு எதிராக ஒரு சட்டத்தை மத்திய பிரதேசத்தில் கொண்டு வந்தோம். இந்தப் படம் அது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதால் வரி விலக்கு அளிக்கப்படும் என்றார்.

பிரபல இயக்குநர் சுதிப்தோ சென் இயக்கியுள்ள 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்தில் அதா ஷர்மா, யோகிதா பிஹானி, சோனியா பலானி, சித்தி இத்னானி, விஜய் கிருஷ்ணா, பிரணாய் பச்செளரி, பிரணவ் மிஸ்ரா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்த படத்தின் டீசர் சில மாதம் முன்பு வெளியானது.

Tax exemption for the film The Kerala Story in Madhya Pradesh: Chief Minister Shivraj Singh Chouhan announced

'தி கேரளா ஸ்டோரி' படத்தின் டீசரில் கேரளாவைச் சேர்ந்த இந்து மற்றும் கிறிஸ்தவ பெண்கள் ஆப்கானிஸ்தான் நாட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு இஸ்லாம் மதத்துக்கு கட்டாயமாக மதமாற்றம் செய்யபடுவதாகவும், அப்படியே அவர்கள் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் இணைக்கப்படுவதாகவும் காட்சிகள் இருந்தது. இதற்கு அப்போதே சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர்

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் 'தி கேரளா ஸ்டோரி' படத்தின் ட்ரைலர் வெளியானது. இந்த படத்தின் ட்ரைலரில் 3 மாற்று மத பெண்களும், ஒரு இஸ்லாமிய பெண்ணும் கல்லூரியில் நண்பர்களாகிறார்கள். அந்த இஸ்லாமிய பெண்ணின் உதவியோடு மீதம் இருக்கும் பெண்களை மதமாற்ற செய்யும்படி செய்கிறார்கள்.

அதற்கேற்றாற்போல் ஒரு சூழலை உருவாக்கி நம்மை இவரால் மட்டும்தான் காப்பாற்ற முடியும் என்று அந்த பெண்களை நம்பவைத்து ஹிஜாப் அணியவைத்து அப்படியே மதம் மாற்றம் செய்கிறார்கள். பின்னர் அவர்களுக்கு இஸ்லாமிய முறைப்படி திருமணம் செய்ய வைத்து, அங்கிருந்து நாடு கடத்தப்பட்டு ISIS அமைப்பில் இணைத்து விடுகிறார்கள். இப்படியாக 'தி கேரளா ஸ்டோரி' படத்தின் ட்ரெய்லர் இருந்தது

மேலும் இது ஒரு உண்மை கதை என்றும், கேரளாவைச் சேர்ந்த 32,000 இந்து மற்றும் கிறிஸ்தவ பெண்கள் ஆப்கானிஸ்தான் நாட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு இஸ்லாம் மதத்துக்கு கட்டாயமாக மதமாற்றம் செய்யப்பட்டு, ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் இணைக்கப்படுவதாகவும் அந்த ட்ரைலரில் காண்பிக்கப்பட்டது. இதுதான் கேரளாவில் கொந்தளிப்பு ஏற்பட காரணமாகியது.

கேரளாவைச் சேர்ந்த ஒரு தரப்பினர் கூறுகையில், மதவாதம் இல்லாத கேரளாவில் இது போல் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளதாக கூறி மதக் கலவரத்தை ஏற்படுத்த முயல்கிறார்கள். மேலும் இந்த படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்றார்கள். இந்தி படமான 'தி கேரளா ஸ்டோரி' படம் மலையாளம், தமிழ், தெலுங்கு உள்ளிட்ட 4 மொழிகளில் வரும் மே 5-ம் தேதியான இன்று வெளியாக உள்ளது. இந்த படத்திற்கு எதிராக போராட்டங்கள் நடைபெறும் அபாயம் இருப்பதால், படத்தை வெளியிட அனுமதிக்ககூடாது என்று தொடரப்பட்ட வழக்குகளை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.

இதனிடையே தமிழ்நாட்டிலும் இந்த திரைப்படம் வெளியானால் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று தமிழக அரசை மாநில உளவுத்துறை அலார்ட் செய்தது. இந்தசூழலில் தமிழ்நாட்டிலும் கேரளாவில் இந்த படத்துக்கு தடைகேட்டு அந்தந்த ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு வியாழக்கிழமை அன்று தள்ளுபடி ஆனது.

இதையடுத்து திட்டமிட்டபடி தி கேரளா ஸ்டோரி திரைப்படம் இந்தியா முழுவதும் நேற்று வெளியானது. இந்த படம் வெளியாகும் தியேட்டர்களின் முன்பு போராட்டங்கள் நடத்தப்படலாம் என்று தகவல்கள் வெளியானதால் போலீஸ் பாதுகாப்பும் அளிக்கப்படுகிறது. இந்நிலையில் வடமாநிலங்களில் இப்படம் நேற்று முதல் நாளில் ரூ.6.5 கோடி வரை வசூல் கிடைத்ததாகவும் இந்தியா முழுவதும் ரூ.10 கோடி வரை வசூல் ஈட்டியதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்துக்கு ரிவிலக்கு அளிப்பதாக மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறுகையில், "லவ் ஜிஹாத் வலையில் சிக்கிக்கொள்கின்ற பெண் குழந்தைகளின் வாழ்க்கை எப்படி நாசமாகிறது என்பதை 'தி கேரளா ஸ்டோரி' படம் எடுத்துரைக்கிறது.

இது பயங்கரவாதத்தின் வடிவமைப்பையும் அம்பலப்படுத்துகிறது. நாங்கள் கட்டாய மதமாற்றத்திற்கு எதிராக ஒரு சட்டத்தை ஏற்கனவே மத்திய பிரதேசத்தில் கொண்டு வந்திருக்கிறோம் . இந்த கேரள ஸ்டோரி படம் அது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளது. இதனை அனைவரும் பார்க்க வேண்டும், என்பதால், மத்தியப் பிரதேச அரசு இப்படத்திற்கு வரி விலக்கு அளிக்கிறது" இவ்வாறு அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் வீடியோவில் பேசி உள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+