பெண்ணை பலாத்காரம் செய்து கொலை செய்த டாக்சி டிரைவரும் 3 நண்பர்களும் - நால்வரும் கைது
டேராடூன்: டெல்லியைச் சேர்ந்த பெண் ஒருவர் டேராடூனில் ஒரு டாக்சி டிரைவர் மற்றும் டிரைவரின் மூன்று நண்பர்களால் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு, அவருடைய ஆண் நண்பரும் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
27 வயதான மெளமிதா தாஸ் என்ற அப்பெண்மணி மற்றும் அவரது 24 வயதான அவிஜித் பால் என்ற ஆண் நண்பரும் அக்டோபர் 21 ஆம் தேதி அன்று தீபாவளிக்காக டேராடூன் வந்தடைந்தனர். ஆனால், இரண்டு நாட்கள் கழித்து இருவரும் காணமல் போயுள்ளனர் என்று விகாஸ்நகர் பகுதி காவல் அதிகாரியான சவப்பன் கிஷோர் சிங் தெரிவித்துள்ளார்.

நான்கு பேர் கைது:
இந்த நிலையில் மெளமிதா மற்றும் அவிஜித்தைக் கொன்றது தொடர்பாக டாக்ஸி டிரைவர் ராஜூ மற்றும் அவரது மூன்று நண்பர்களான பப்லு, குட்டு, குண்டன் ஆகிய நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மீது பாலியல் வன்முறை மற்றும் கொலை, கொள்ளை ஆகிய வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

டைகர் பால்சிலிருந்து திரும்பியபோது:
அக்டோபர் 23 ஆம் தேதி அன்று அப்பெண்ணும், அவரது நண்பரும் டாக்சியில் டைகர் பால்சில் இருந்து திரும்பி வரும்பொழுது, சக்ரட்டாக் என்ற இடத்திலிருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில், நால்வரும் சேர்ந்து மெளமிதாவையும், அவரது நண்பரையும் தாக்கியுள்ளனர்.

பால் முதலில் கொலை:
"முதலில் பாலை கழுத்தை நெறித்துக் கொன்ற அவர்கள் பின்னர் அப்பெண்ணை பலாத்காரம் செய்துள்ளனர். மேலும், அவர்களுடைய பொருட்களை எல்லாம் கொள்ளை அடித்துக் கொண்டு, இரண்டு வெவ்வேறு இடங்களில் உடல்களை வீசியுள்ளனர்" என்று போலீஸார் கூறியுள்ளனர்.

இரு இடங்களில் உடல் வீச்சு:
இந்த கொலைவெறிச்சம்பவம், பாலின் உடல் உத்ரகாசியின் புரோலா பகுதியில் இருந்து கைப்பற்றப்பட்டவுடன் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

யமுனையில் பெண் உடல் வீச்சு:
அப்பெண்ணின் உடலானது, யமுனை நதியில், லக்மண்டால் பகுதியில் வீசப்பட்டுள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டது.

தந்தை கொடுத்த புகார்:
இந்த கொலை சம்பவம் பற்றி அக்டோபர் 29 ஆம் தேதி அன்று தாஸின் தந்தை வழக்கு பதிவு செய்துள்ளார். அதன்பின்னரான தேடுதலில்தான் இத்தனை விவரங்களும் வெளிவந்துள்ளது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications